Kidny

Kidny

வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாத்தியப்படுமா ? (பாகம்-1)வடக்கு – கிழக்கு இணைப்பினை முஸ்லிம் தலை¬வர்¬களும் மக்¬களும் ஏற்¬றுக் கொள்ள வேண்டுமென்று, தமிழ்த்¬ தே¬சியக் கூட்¬ட¬மைப்பின் தலை¬வரும் எதிர்க்¬கட்¬சித் தலைவரு¬மான  இரா.சம்பந்தன் தெரி¬வித்தார்.

தமிழ் பேசும் மக்களின் பெரும்¬பான்மை பாது¬காக்¬கப்¬ப¬ட¬வேண்டும் என்¬ப¬தற்காகவே, தாம் வடக்கு – கிழக்கு இணைப்பை கோருவதாகத் தெரிவித்த அவர்,  தமிழர்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்க வேண்¬டு¬மென்ற காரணத்துக்காக நாம் அவ்¬வாறு கூறவில்லை  என்றும் சொன்னார்.

இதேவேளை, ஒரு பக்¬கு¬வமான படித்த முஸ்லிம் நபரை,  எமது முத¬ல¬மைச்¬ச¬ராக ஏற்றுக்¬கொள்¬வ¬தற்கு நாம் தயா¬ரா¬க¬ இருக்¬கின்றோம் என்றும், அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தமிழ் சங்¬கத்தில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தமிழ் பேசும் மக்களின் பிர¬தே¬சங்¬களில் பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்¬டார்கள். விசேடமாக கிழக்கு மாகா¬ணத்தில் குடி¬யேற்¬றங்கள் மிகவும் தீவி¬ர¬மாக இடம்¬பெற்¬றி¬ருந்¬தன. தமிழ் மக்கள் இந்த நாட்¬டி¬லி¬ருந்து கூடு¬த¬லாக வெளியே¬று¬வ¬தற்கு முன்¬ன¬தாக இறு¬தி¬யாக மக்கள் தொகை மதிப்¬பீடு 1981ஆம் ஆண்டே மேற்¬கொள்¬ளப்¬பட்¬டுள்¬ளது.

எமது நாட்டில் 1947ஆம் ஆண்¬டுக்கும் 1981ஆம் ஆண்¬டுக்¬கு¬மி¬டை¬யி¬லான காலப்¬ பகுதியில் சிங்¬கள மக்-களின் இயற்கை ரீதி¬யான அதி¬க¬ரிப்பு 2.5 வீத¬மாகும். இக்காலத்தில் கிழக்கு மாகா¬ணத்தில் சிங்க மக்-களின் இயற்கை ரீதி¬யான அதி¬க¬ரிப்பு 09 வீத¬மாகும். தற்¬போது வட¬மா¬கா¬ணத்¬திலும் அவ்¬வி¬த¬மான நிகழ்-வு¬களை நிறைவேற்று¬வ¬தற்கு முயற்¬சிகள் எடுக்¬கப்¬ப¬டு¬கின்¬றன.

இக்¬கா¬ர¬ணத்தின் நிமித்தம்தான் வடக்கு – கிழக்கு இணைந்¬தி¬ருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்¬களின் பெரும்¬பான்மை பாது¬காக்¬கப்¬ப¬ட¬வேண்டும் என்¬பதை திட¬மாக வலியு¬றுத்தி வரு¬கின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்¬து¬கொள்ள வேண்டும். முஸ்லிம் தலை¬வர்கள் புரிந்¬து¬கொள்ள வேண்டும்.தமிழர் ஒருவர்தான் முதலமைச்சராக இருக்க வேண்¬டு¬மென்ற கார¬ணத்¬திற்¬காக நாம் அவ்¬வாறு கூறவில்லை.

ஒரு பக்¬கு¬வா¬மான படித்த முஸ்லிம் நபரை எமது முத¬ல¬மைச்¬ச¬ராக ஏற்¬றுக்¬கொள்¬வ¬தற்கு நாம் எப்போதும் தயா¬ரா¬க¬வி¬ருக்¬கின்றோம். எமது பெரும்¬பான்மை பாதுகாக்கப்படு¬வது சந்¬தே¬கத்¬துக்கு இட-மின்றி உறுதிப்ப¬டுத்¬து¬வ¬தாக இருந்தால், வடக்கு – கிழக்கு மாகா¬ணங்கள் இணைக்¬கப்¬ப¬ட¬வேண்டும். அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்¬டு¬மென்¬பதை அன்¬பா¬கவும் தாழ்¬மை¬யா¬கவும் கேட்¬டுக்¬கொள்ள விரும்புகின்றோம்” என்றார்.

  ஹக்கீமை  நம்பி   ஏமாந்த   தமிழ்  கூட்டமைப்பு     

தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவராக   சம்பந்தர்  இருக்கும்  வரைதான்  இப்படியான  ஒற்றுமை  பற்றிய   பேச்சு வரும். கடந்த  மஹிந்த  காலத்தில் கிழக்கு  மாகாண  ஆட்சியை அமைப்போம்  என்று  சம்பந்தர் கெஞ்சாத   குறையாக  ஹக்கீமிடம்   பகிரங்க  அழைப்பு   விடுத்தார்.கூட்டமைப்பின்  12  ஆனசங்களுடன்  ஐ.தே.க யின்  4  ஆசனம்   மற்றும்  மு.கா சின்  7   ஆசனங்களுடன்  பெரும்பான்மை  பலத்துடன்  ஆட்சி  அமைப்போம்  என்று   சம்பந்தர்  பெருத்த   எதிர்பார்ப்புடன் ஆட்சி  அமைப்போம்  என்றும்   கூட்டமைப்புக்கு  எந்தவொரு   அமைச்சும்   வேண்டாம்  மு.கா அத்தனை  அமைச்சுக்களையும் முதல்  அமைச்சையும்   பெற்றுக் கொண்டு  ஆட்சி அமைக்கலாம்   என்று   சம்பந்தர்  அறைகூவல்  இட்டார் .

ஆனால்   செவிடன் காதில் ஊதிய  சங்கு  போன்று   ஹக்கீம்   சம்பந்தரின்  அறைகூவலை  உதாசீனம்  செய்து விட்டு மகிந்தவுடன்   கை கோர்த்து  மஹிந்த   தரப்பு  ஆட்சி அமைக்க ஒப்புதல் கொடுத்தார்.

இது   முஸ்லிம் சமுகத்தில் கறை  படிந்த   வரலாறு..ஹக்கீமைப்   பொறுத்த   மட்டில்  தனது பதவிக்காக தனது  அமைச்சைக்  காப்பாற்ற  அந்த  நீதி  அமைச்சை   தக்க வைக்க  கிழக்கு மாகாணத்தில்  தமிழர்  தரப்பை  எட்டி உதைத்துவிட்டு .”செத்த  பிணத்தின்  மீது  இருந்து கொண்டு  உணவு  உண்பது போன்று”  அன்று  மகிந்தவுக்கு  ஆதரவு   தெரிவித்து  தனது  கட்சியின்  மாகாண   உறுப்பினர்களை   தாரை   வார்த்தார்.

ஆக  கூட்டமைப்பை  ஹக்கீம்  ஒரு  நாளும் ஏற்றுக்  கொள்ளவில்லை,ஹக்கீமை   நம்பி   ஏமாந்த   வரலாறுதான்   உள்ளது
 ஹக்கீமை  இன்னும்  கூட்டமைப்பு   நம்புவதுதான்  வேடிக்கை.  

அப்போது  மஹிந்த   தரப்பு  கொண்ட  சுதந்திரக்கட்சி  உறுப்பினர்  கிண்ணியா   நஜீப்பை  முதல் அமைச்சராக  மஹிந்த நியமித்தார்..மஹிந்த தொடர்ந்து  ஆட்சியில் இருந்தால் மு.கா. முதல்  அமைச்சர்  பெற்றுருக்குமா என்பது சந்தேகமே.

முஸ்லிம்   மக்களின்  சம்தம் கிடைக்குமா ?


இப்போது சம்பந்தர்  தந்துள்ள  அறைகூவல்  எந்தளவு  சாத்தியம்  என்பது கேள்விக் குறியே. காரணம்  வட  கிழக்கு  இணைப்பு  வேண்டும்  என்று தமிழர்  தரப்பு  நினைத்தால் அது  ஹக்கீம்  மட்டும்  விரும்பி சாத்தியமா ?ஹக்கீம் மட்டும்தான் முஸ்லிம்களின்  தலைவரா?  .என்ற  கேள்வி பலமாகவே  உள்ளது

ஹக்கீமை   பொறுத்த  மட்டில் அவருக்கு  அவரது   அமைச்சுக்கு   எந்தவொரு  ஆபத்தும்  வரக் கூடாது. .அதனால்  ஹக்கீமுக்கு   கொடுப்பதை கொடுத்தால் அவர்  சம்மதிப்பார். ஹக்கீம்  7  எம்பிக்களால்  உள்ள கட்சியாகவும் 7  மாகாண  உறுபினர்களை  கொண்ட   கட்சியாகவும்  உள்ளார்.


ஹக்கீம் கட்சிக்கு  அடுத்த  படியாக  ஒரேயொரு எம்பி  குறைவாக  6 எம்பிக்கள் கொண்ட  கட்சியாவும் ரிசார்ட் பதியுத்தீன்  உள்ளார்  வளர்ந்து   வருகின்ற  ஒரு கட்சி.முதல்  முதலாக  கிழக்கில்  3   மாவட்டங்களிலும்  தனது கட்சி  சார்பாக  மாகாண   வேட்பாளர்களை  நிறுத்தவுள்ளார்.கிழக்கில்  குறைந்தது  3   மாவட்டங்களிலும்  3   ஆசனம்   பெறும் நிலை உள்ளது.ரிஷாத்  அணி  2-3  ஆசனங்கள்  பெற்றால்   ஹக்கீமின்  7  ஆசனங்கள் வீழ்ச்சி  அடையும்.. ஹக்கீம்  கிழக்கில் அதிகமாக  7 ஆசனங்கள்   மட்டுமே  பெற்று  வருகின்றார் .இந்த  7  ஆசனத்தில் ரிசாத்  2-3  பெற்றால்  ஹக்கீம்  அணி 4-5 ஆசனங்கள்  மட்டுமே  பெற முடியும் .அதனால்  கிழக்கில்  ரிசாத்  அசைக்கமுடியாத  ஒரு சக்தியாக   மாறும்  நிலை  உள்ளது.


ரிசார்ட்  எந்த வகையிலும் இணைப்புக்கு சம்மதிக்க மாட்டார்.ஏற்கனவே ரிசாத்துக்கும் வடக்கு  அரசியல்  வாதிகளுக்கும் இடையில்  முரண்பாடுகளும்  விரிசலும்  தொடர்ந்து   வருகின்றது .இந்த  நிலையில்  ரிசாத்   ஒரு போதும்  இணைப்புக்கு  சம்மதம்  கொடுப்பாரா   என்பது  பெருத்த  சந்தேகம்தான் . .
..மறுபக்கம் அம்பாறையில் அதாவுல்லா கிழக்கு  இணைப்புக்கு   ஒரு போதும்  விரும்பமாட்டார்.அதாவுல்லா கடந்த  பொது தேர்தலில்  தோல்வி அடைந்த  பின்னர் தற்போது  அதாவுல்லா  ஜனாதிபதி  மைத்திரி தலைமையிலான சுதந்திர  கட்சியில் இணைந்துள்ளார். ஏற்கனவே  நீதி மன்றம் மூலம்  கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது.அப்படியிருக்க தற்போது  மீண்டும்  கிழக்கை  இணைத்தால் அதே  நீதி மன்றம்  பிரிக்கும்.அதற்காக  பலர்   வழக்கு தாக்கல் செய்ய முன்வருவார்கள். .


அடுத்த   வருடம்  நடுப்பகுதியில்  கிழக்கு  மாகாண தேர்தலில்  அதாவுல்லா  அணி அம்பாறையில்  சுதந்திரக்கட்சியின்  கீழ்   அவரது   வேட்பாளர்களை  களமிறக்கவுள்ளார். குறைந்தது ஒரு ஆசனமாவது  கிடைக்கும். அதனால்  ஹக்கீமின்  ஆசனம்  இன்னும் குறையும்.   .மறுபுறம் பெருமளவு முஸ்லிம் மக்கள் இதற்க்கு விரும்பமாட்டார்கள் .நாம் 5-10 பேர் மட்டும் விரும்பினால் போதுமா? இரண்டு இனங்கள் மத்தியில் இன்னும்பல முரண்பாடுகள் உள்ளது முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் யாரை எடுத்துக் கொண்டாலும் தமிழனோடு வாழ முடியாது என்ற நிலை நிரந்தரமாக உள்ளது.கடந்த கால   கசப்பான  சம்பவங்கள்  இன்னும்  இரண்டு இனத்தில் இருந்தும் மாறவில்லை.இப்போது  தமிழ்  முஸ்லிம்  பகுதிக்குள்  இரண்டு  இனங்களும் சென்று  வரக்  கூடிய  நல்ல  சூழ்நிலை  அமைந்துள்ளது.தமிழர்களோடு சேர்ந்து  இனைஹ்டு வாழ்வது  கடினம் என்ற  சந்தேகம்  இன்னும்  நிரந்தரமாகவே உள்ளது   .இதற்க்கு தமிழர் தரப்பு எந்தவொரு பதிலும் இல்லை.
முஸ்லிம்கள் தமிழர்களோடு ஒற்றுமைப்பட பயப்படும் காரணி என்ன?

அவர்கள்   ஏன்  பயப்படுகின்றார்கள் போன்ற சந்தேகங்களை களைய தமிழ்  கூட்டமைப்பு அல்லது   தமிழர்  தரப்பு   எந்தவொரு செயலையும் இன்னும்  செய்யவில்லை. முஸ்லிம்  என்றால்  விரோதி  என்று  தமிழர்  தரப்பிலும் தமிழன்  என்றால் விரோதி  என்று முஸ்லிம்  தரப்பிலும்  நிரந்தரமாகவே  ஒரு  எண்ணம்  உள்ளது .எப்படித்தான்  பழகினாலும்  இந்த நிலை  இன்னும் மாறவில்லை.

வடகிழக்கு இணைப்பு என்ற பேச்சு வரும்போது அதாவுல்லா .ரிசார்ட் போன்றோர் பலமான எதிர்ப்பை காட்டுவார்கள் .பழைய பல்லவிகளை பாடுவார்கள அரச்ச மாவை அரைப்பார்கள்.புலிகளின் கொலைகளை ஏலம் போடுவார்கள் ..அப்படியானால்  முஸ்லிம் மக்கள்  இணைப்பை  விரும்புவர்களா? எனவே இணைப்பு  என்பது  சாத்தியம் இல்லை
.முஸ்லிம் மக்களை  அரவணைத்து செல்லக் கூடிய  அரசியல்  நகர்வு  எதனையும்  கூட்டமைப்பு  இன்னும்  செய்யவில்லை. பேச்சளவில்  மட்டும் இப்படியான  கருத்துக்களை  தலைவர்   சம்பந்தர்  கடந்த  காலங்களாக  பேசி வருவது  வரவேற்கதக்கது.
எம்;.எம்;.நிலாம்டீன்

வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாத்தியப்படுமா ? (பாகம்-1) வடக்கு   கிழக்கு  இணைப்பை  முஸ்லிகள்  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது   சாத்தியப்படுமா ?    (பாகம்-1) Reviewed by Madawala News on 7/19/2016 10:06:00 AM Rating: 5