Accaddemy

நேற்று நாமலை வரவேற்க சென்ற 10 முக்கியஸ்தர்களிடம் பிட்பொகட் காரர்கள் கைவரிசை ...



பாரிய நிதி மோசடி பிரிவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் மகன் நாமல் ராஜபக்ச நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

நேற்றைய தினம் மஹிந்த அணி ஆதரவாளர்கள் பெருந்திரளானவர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்து அவரை வரவேற்க காத்திருந்தனர்.

இதன் போது சுதந்திர கூட்டமைப்பின் 10 முக்கிய உறுப்பினர்களின்  வோலட் ( மணி பேர்ஸ்) திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மூவரின் மணி பேர்ஸில் இருந்த  பணத்தை எடுத்து விட்டு ஆவணங்களை விட்டு சென்றுள்ளனர்.

மணி பேர்சை தொளைத்தவர்களில் சுதந்திர கூட்டமைப்பு உள்ளூராட்சி தலைவர்கள் நாமல் ராஜபக்‌ஷவின் நண்பர்களும் அடக்கம்.


நேற்று நாமலை வரவேற்க சென்ற 10 முக்கியஸ்தர்களிடம் பிட்பொகட் காரர்கள் கைவரிசை ... நேற்று நாமலை வரவேற்க சென்ற 10 முக்கியஸ்தர்களிடம் பிட்பொகட் காரர்கள் கைவரிசை ... Reviewed by Madawala News on 7/19/2016 08:44:00 AM Rating: 5