Ad Space Available here

நாளை 10 இலட்சம் மக்­கள் களத்தில்.. இலங்­கையின் சரித்­தி­ரத்தில் தடம் பதிக்­கும் நிகழ்வு.பொது எதி­ரணி ஏற்­பா­டு­ செய்­துள்ள பாத­யாத்­திரை திட்­ட­மிட்ட­படி நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. அதில் சகல மாவட்­டங்­க­ளை யும் பிர­தி­நி­தித்­துவப்படுத்தும் வகையில் 10இலட்சம் மக்­களை கள­மி­றக்­குவோம்.

அதற்­கான சகல ஏற்­பா­டு­களும் மாவட்ட மட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சிங்­கள, தமிழ், முஸ்­லிம்கள் என சக­ல­ரி­னதும் ஆத­ர­வுடன் நடை­பெறும்
இப்­பாதை யாத்­திரை இலங்­கையின் சரித்­தி­ரத்தில் தடம் பதிக்­க­வுள்ள நிகழ்­வாக அமை­ய­வுள்­ள­தாக பொது எதி­ரணி தெரி­வித்­துள்­ளது.

பொது எதி­ரணி ஏற்­பாடு செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று காலை கொழும்­பி­லுள்ள என.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் டலஸ் அழ­கப்­பெ­ரும குறிப்­பிட்டார்.
அங்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழகப் பெரும கருத்துத் தெரி­விக்­கையில்,

பொது எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் கட்சி தலை­வர்கள் தலை­மை­யி­லான குழுக்கள் நாடு­பூ­ரா­கவும் சென்று பாத­யாத்­திரை தொடர்­பி­லான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளனர். இன்னும் 12 தொகு­தி­களின் ஏற்­பாட்டு நட­வ­டிக்­கைகள் மாத்­திரம் எஞ்­சி­யி­ருக்­கின்­றன. அதனை பூர்த்தி செய்­து­வி­டுவோம்.

ஆகவே பாத யாத்­திரை திட்­ட­மிட்­ட­படி வெற்­றி­ய­ளிக்­க­வுள்­ளது. அதனைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யாத பல சக்­திகள் யாத்­தி­ரையைத் தடுப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றன. அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மிகுந்த கரி­ச­னை­யுடன் மேற்­கொள்­கின்­றனர். சில பிர­தே­சங்­களில் அசச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதனைத் தடை­செய்­வ­தற்கு நீதி­மன்­றத்தை நாட­வுள்­ள­தா­கவும் வெளிப்­ப­டை­யாகத் தெரி­வித்­துள்­ளனர். கண்­டி­யி­லி­ருந்து மாவ­னல்லை வரை­யான பிர­தே­சங்­க­ளி­லுள்ள சகல பொது மைதா­னங்­க­ளையும் அர­சாங்­கத்­தி­லுள்ள முக்­கி­யஸ்தர் ஒருவர் பதிவு செய்­துள்ளார். 50 தொடக்கம் 75 வரை­யி­லான ஆலோ­ச­கர்­களை பத­வியில் வைத்­தி­ரு­ப­வர்­க­ளுக்கு இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது இல­கு­வான விட­ய­மாகும்.

மேலும் விவ­சாய சேவை ஆணை­யா­ள­ரினால் சுற்­று­நி­ரூபம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதன் பிர­காரம் நாடு­பூ­ரா­க­வு­முள்ள விவ­சாய ஆராய்ச்சி நிலை­யங்­க­ளினால் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் துறை­சார்ந்த விசேட ஆய்வு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதற்­காக விவ­சாய ஆராய்ச்சி அதி­கா­ரிகள் தாம் பணி­யாற்றும் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­களில் ஆராய்ச்சி நட­வ­டிக்­கையில் ஈடு­பட வேண்டும் எனக்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
பாத­யாத்­தி­ரை­யினை தடுப்­ப­தற்­கா­கவே அர­சாங்கம் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கி­றது.

எனினும் எவ்­வா­றான தடைகள் ஏற்­ப­டினும் பொது எதி­ரணி ஏற்­பாடு செய்­த­துபோல் பாத­யாத்­திரை உரிய முறையில் நடை­பெறும். எனவே எதிர்­வரும் இரண்டாம் திகதி வெளி­வரும் பத்­தி­ரி­கை­களில் 'ஒரு­மில்­லியன் மக்கள் வீதியில்' என்ற தலைப்­பி­லான செய்­தியைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

மேலும் கடந்த வாரத்தில் பிர­தமர் ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. ஆகவே பாத­யாத்­திரை தொடர்பில் ஊட­கங்­களும் அச்­சு­றுத்­தப்­ப­டலாம். எனினும் எவ்­வ­கை­யி­லா­ன­அ­ழுத்­தங்கள் ஏற்­பட்­டாலும் ஊட­கங்கள் முன்­னின்று செயற்­பட்டு, மக்கள் திர­ளாக கலந்து கொள்ளும் சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த இந்நிகழ்வில் தடம் பதிக்குமாறு வேண்டுகிறோம்.


பாதயாத்திரையினை பொது எதிரணி ஏற்பாடு செய்தாலும் நாட்டிலுள்ள ஏராளமான அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குகின்றன. எனவே ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சகலரும் இதில் இணைந்து கொண்டு மக்களின் உரிமைகளையும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
நாளை 10 இலட்சம் மக்­கள் களத்தில்.. இலங்­கையின் சரித்­தி­ரத்தில் தடம் பதிக்­கும் நிகழ்வு. நாளை 10 இலட்சம் மக்­கள் களத்தில்..  இலங்­கையின் சரித்­தி­ரத்தில் தடம் பதிக்­கும் நிகழ்வு. Reviewed by Madawala News on 7/27/2016 11:17:00 AM Rating: 5