Accaddemy

ஆகஸ்ட் 11 , 12 இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாடு ; சீன பெளத்த சங்கத்தின் உபதலைவர் விஷேட உரை ...


உலக முஸ்லிம் லீக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாடு எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பில் விளை­யாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.


முன்னாள் கொழும்பு மேயரும் சவூதி அரே­பி­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூது­வ­ரு­மான எம். ஹுஸைன் மொஹ­மட்டின் தலை­மையில் செயற்­படும் இலங்கை இஸ்­லா­மிய நிலையம் மேற்­படி மாநாட்டை மாபெரும் நிகழ்­வாக நடத்த ஏற்­பாடு செய்­துள்­ளது.

அந்த மாநாட்­டிற்­கான அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு அலரி மாளி­கை­யி­லுள்ள விருந்­து­ப­சார மண்­ட­பத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் ஆத­ரவில் காலை 10 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.


இந்த மாநாட்டில் சவூதி அரே­பியா, பங்­க­ளாதேஷ் ,பாகிஸ்தான், தாய்­லாந்து, பிலிப்பைன்ஸ், இந்­தியா, தாய்வான், நேபால், கம்­போ­டியா, மியன்மார், சீனா மற்றும் உள்­நாட்டு பிர­தி­நி­திகள் பங்­கேற்று 'முஸ்­லிம்­களும் சக­வாழ்வின் சுபீட்­சமும்' என்ற தலைப்பில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.


மேற்­படி மாநாட்டில் சீன பௌத்த சங்­கத்தின் உப தலைவர் வென் ஸு சாங் கலந்­து­கொண்டு , முரண்­பாட்டு நாக­ரி­கத்­தி­லி­ருந்து பங்­கா­ளித்­துவம்' என்ற தலைப்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.


அதே­ச­மயம் இந்த மாநாட்டில் உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் கலா­நிதி அப்­துல்லாஹ் முஷின் அப்துல் அல் துர்­கியும் கலந்­து­கொள்­ள­வுள்ளார். 


உலக முஸ்லிம் லீக்­கா­னது புனித மக்கா நகரை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் சர்­வ­தேச அமைப்­பொன்­றாகும். அந்த அமைப்பு வன்­மு­றையைத் தூண்டும் அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் எதிர்ப்புத் தெரி­விப்­ப­துடன் ஏனைய கலா­சா­ரங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்னெடுக்க ஊக்குவித்து வருகின்றது. 


மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 11 , 12 இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாடு ; சீன பெளத்த சங்கத்தின் உபதலைவர் விஷேட உரை ... ஆகஸ்ட் 11 , 12 இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாடு ; சீன பெளத்த சங்கத்தின் உபதலைவர் விஷேட உரை ... Reviewed by Madawala News on 7/30/2016 09:41:00 AM Rating: 5