Accaddemy

முதலமைச்சரின் முயற்சியில் ஏறாவூர் பொதுச்சந்தையை நவீனமயப்படுத்துவதற்காக சுமார் 12 கோடி


ஏறாவூர் பழைய பொதுச்சந்தையை நவீனமயப்படுத்துவதற்காக சுமார் 12 கோடி ரூபாயை நகர அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


இந்தச் சந்தையானது மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதுடன், சந்தைக்குரிய அடிப்படை வசதிகளின்றியும் காணப்படுகிறது. இதன் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் நுகர்வோரும் இடநெருக்கடி, சுகாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


இந்தச் சந்தையின் புனரமைப்புத் தொடர்பில் நீண்டகாலமாக வியாபாரிகளும் நுகர்வோரும் உள்ளூராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தும் வந்திருந்தனர். இந்நிலையிலேயே இந்தச் சந்தையை நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதற்கான புனரமைப்புப்பணி உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.



முதலமைச்சரின் முயற்சியில் ஏறாவூர் பொதுச்சந்தையை நவீனமயப்படுத்துவதற்காக சுமார் 12 கோடி முதலமைச்சரின் முயற்சியில் ஏறாவூர் பொதுச்சந்தையை நவீனமயப்படுத்துவதற்காக சுமார் 12 கோடி Reviewed by Madawala News on 7/18/2016 03:25:00 PM Rating: 5