Free Space

படுதோல்வியில் முடிந்த துருக்கி இராணுவப் புரட்சி. 120 பேர் கைது.



துருக்கி ராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலருமே காரணம் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டினார்.

துருக்கி  பிரதமர் வெளிநாடு சென்றிருந்த போது, நேற்றிரவு துருக்கியில் புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக ராணுவம் அறிவித்தது.

இதனையடுத்து மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மக்கள் ராணுவத்திற்கு எதிராக ராணுவ டாங்குகளை முன்னேற விடாமல் போராட்டம் நடத்தினர்.

ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாக டாக்சிம் சதுக்கத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டத்தின் பின்னர் ராணுவப்புரட்சி முறியடிக்கப்ட்டது.

இந்நிலையில் இஸ்தான்புல்லின் அட்டதுர்க் விமான நிலையம் வந்திறங்கிய துருக்கி அதிபர் எர்டோகன் கூறியதாவது:

துருக்கியில் எற்பட்டுள்ள ராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலரும் தான் காரணம். அவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும். துருக்கி நாட்டின் நேர்மை மற்றும் ஒற்றுமையை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல் தேச துரோகம். ராணுவ தளபதி எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. புரட்சியில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக  துருக்கி தலைநகர் அங்காராவில் அரசு மாளிகை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்து. போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படுதோல்வியில் முடிந்த துருக்கி இராணுவப் புரட்சி. 120 பேர் கைது. படுதோல்வியில் முடிந்த துருக்கி இராணுவப் புரட்சி. 120 பேர் கைது. Reviewed by Madawala News on 7/16/2016 07:39:00 AM Rating: 5