Accaddemy

15 வயது மாணவியின் வாழ்வில் கிடைத்த மோசமான அனுபவங்கள்.. இளம் பிக்குவும் சம்பவத்தில்..



பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, பிக்கு ஒருவர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பல்லம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பல்லம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயது மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி இரவு சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை, அவரது கால்களைப் பிடித்து இழுத்து துஷ்பிரயோகம் செய்ய ஒருவர் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களது வீட்டுக்கு அருகிலுள்ள 17 வயது வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸாரிடம் வாக்குமூலமளித்த சிறுமி, முன்னதாக தான் இரண்டு முறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் வௌிப்படுத்தியுள்ளார்.

தான் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது, பக்திப் பாடல் போட்டியில் கலந்து கொள்ள கொழும்புக்கு சென்றிருந்ததாகவும், அங்கு தான் தங்கியிருந்த விஹாரையிலுள்ள இளம் பிக்கு ஒருவர் தன்னை முதன்முதலில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் சிறுமி சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்திப் பாடல்கள் எழுதித் தருவதாக கூறி குறித்த பிக்கு தன்னை அழைத்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஆறாம் தரத்தில் கல்வி கற்ற போது, உறவினர் ஒருவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த இரண்டு விடயங்களையும் பெற்றோர் அறிந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் தனது பிள்ளை குறித்து அதிக அவதானம் செலுத்தி இருப்பின் இந்த சம்பவம் நடந்திருக்காது என, விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை கைதான இரு சந்தேகநபர்களும் ஆணைமடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எனினும், சிறுமியை முதலில் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பிக்கு இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
15 வயது மாணவியின் வாழ்வில் கிடைத்த மோசமான அனுபவங்கள்.. இளம் பிக்குவும் சம்பவத்தில்..  15 வயது மாணவியின் வாழ்வில் கிடைத்த மோசமான அனுபவங்கள்.. இளம் பிக்குவும் சம்பவத்தில்.. Reviewed by Madawala News on 7/25/2016 01:23:00 PM Rating: 5