Accaddemy

இந்தியாவில் 15 ரூபா க‌ட‌னுக்காக‌ கொலை செய்த‌ சாதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்!


வ‌ட‌ இந்தியாவில் மைன்புரி எனுமிட‌த்தில் ஒரு சாதிவெறிய‌னால் த‌லித் க‌ண‌வ‌னும் ம‌னைவியும் கோடாலியால் வெட்டிக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதைத் தொட‌ர்ந்து த‌லித் ம‌க்க‌ள் அங்கே ஆர்ப்பாட்ட‌ம் செய்கின்ற‌ன‌ர்.

தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ரான‌ அந்த‌த் த‌ம்ப‌திக‌ள், உய‌ர்சாதியின‌ரின் க‌டையில் 3 பிஸ்க‌ட் ப‌க்கெட்டுக‌ள் க‌ட‌னுக்கு வாங்கியுள்ள‌னர். சம்ப‌வ‌ தின‌த்த‌ன்று வேலைக்கு சென்று கொண்டிருந்த‌ த‌ம்ப‌தியினரை வ‌ழிம‌றித்த‌ க‌டை உரிமையாள‌ர் கட‌னை க‌ட்டுமாறு கேட்டார். இப்போது ப‌ண‌மில்லை என்றும் ச‌ம்ப‌ள‌ம் கிடைத்த‌ பின்ன‌ர் த‌ருவ‌தாக‌ சொன்னார்க‌ள். 

அவ‌ர்க‌ள் அங்கிருந்து ந‌க‌ர்ந்த‌ போது, க‌டைக்கார‌ர் கோடாலியால் தாக்கினார். க‌ண‌வ‌னின் க‌ழுத்து துண்டிக்க‌ப் ப‌ட்ட‌து. ம‌னைவியும் தாறுமாறாக‌ வெட்ட‌ப் ப‌ட்டார். இருவ‌ரும் ஸ்த‌ல‌த்தில் ம‌ர‌ண‌ம‌டைந்த‌னர். 

ஐரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள் இந்த‌ செய்திக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து வெளியிட்டுள்ள‌ன‌.
இந்தியாவில் 15 ரூபா க‌ட‌னுக்காக‌ கொலை செய்த‌ சாதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்! இந்தியாவில் 15 ரூபா க‌ட‌னுக்காக‌ கொலை செய்த‌ சாதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்! Reviewed by Madawala News on 7/30/2016 12:11:00 AM Rating: 5