Accaddemy

வத்தேகம பகுதியில் வீட்டை உடைத்து லட்சக்கணக்கில் திருடிய மாணவனும்(16), அவனிடம் பொருள் வாங்கியவர்களும் சிக்கினர்.

( மொஹொமட் ஆஸிக்)

வத்துகாமம் பொலிஸ் பிரிவில் பின்னலந்த என்ற பகுதியில் வீடு ஒன்றை உடைத்து சுமார் நான்கு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெருமதியுள்ள தங்க ஆபரணங்களை திருடிய 16 வயதுடைய மாணவன் ஒருவனையும அம் மாணவனிடம் இருந்து திருட்டுப் பொருடகளை கொள்வனவு செய்த இரு வியாபாரிகளையும் வத்துகாமம் பொலீஸார் இன்று 05 ம் திகதி கைது செய்துள்ளனர்.
.

இரண்டு தினங்களுக்கு முன் இவ் வீட்டில் எவரும் இல்லாத சமயத்தில் வீட்டின் யன்னல் வழியாக உற் புகுந்து இம் மாணவன் இத்திருட்டை மேற்கொண்டுள்ளதாக வத்துகாமம் பொலீஸார் தெரிவித்தனர்.
.
இவ்வாறு திருடப்பட்ட தங்க ஆபரனங்களில் ஒரு பகுத்pயை இரு வியாபாரிகளுக்கு விற்கப்பட்டிருந்ததாகவும் அவ்வாறு திருட்டுப் பொருட்களை கொள்வனவு செய்த இரு வியாபாரிகளையும் பொலீஸார் கைது செய்துள்ளனர்.
.
கடந்த பொஸொன் போயா தினமன்று வத்துகாமம் பிரதேசத்தில் 5000 ரூபாய் திருடியுள்ள இச் சிறுவனின் இரண்டாவது திருட்டு இதுவாகும் என்றும் பொலீஸார் தெரிவித்தனர்.
.
இம் மாணவன் வத்துகாமம் பிரதேசத்தில் பிரதான பாடசாலை ஒன்றில் 11 ம் ஆண்டில் கல்வி கற்பதாக தெரிவித்த பொலீஸார் கைது செய்யப்பட் மாணவன் மற்றும் வியாபாரிகள் இருவர் ஆகிய மூவரையும் தெல்தெனியா நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
.

வத்துகாமம் பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

வத்தேகம பகுதியில் வீட்டை உடைத்து லட்சக்கணக்கில் திருடிய மாணவனும்(16), அவனிடம் பொருள் வாங்கியவர்களும் சிக்கினர். வத்தேகம பகுதியில் வீட்டை உடைத்து லட்சக்கணக்கில் திருடிய மாணவனும்(16), அவனிடம் பொருள் வாங்கியவர்களும் சிக்கினர். Reviewed by Madawala News on 7/05/2016 05:53:00 PM Rating: 5