Free Space

சென்ற வருடம் 1837 மில்­லியன் ரூபா இலா­ப­மீட்­டி­ய மின்­சார சபைக்கு இந்த வருடம் நடந்த கதி.



(எம்.எம்.மின்ஹாஜ்)

நிதி அமைச்சின் அறிக்­கையின் பிர­காரம் நடப்­பாண்டின் முதல் நான்கு மாதங்­களில் இலங்கை மின்­சார சபை 5781 மில்­லியன் ரூபா நஷ்­டத்தில் இயங்­கு­வ­தாக ஊழல் எதிர்ப்பு முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் ஊழல் எதிர்ப்பு முன்­ன­ணியின் ஆலோ­சகர் கீர்த்தி தென்­னகோன் தெரி­விக்­கையில்,

கடந்த வரு­டத்தின் போது ஒரு மணித்­தி­யா­ல­த்­திற்கு மின் உற்­பத்தி அல­குக்கு 15.7 ரூபாவே அற­வி­டப்­பட்­டது. எனினும் நடப்­பாண்டில் அத்­தொ­கை­யா­னது 17.54 ரூபா­வாக உயர்ந்­துள்­ளது. இதன்­பி­ர­காரம் மின் அல­குக்­காக 2.41 ரூபா நாட்­டிற்கு நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­பி­ர­காரம் கடந்த வரு­டத்தில் மின்­சார சபை 1837 மில்­லியன் ரூபா இலா­ப­மீட்­டி­யது.

இருந்­த­போ­திலும் நடப்­பாண்டின் நான்கு மாதங்­களில் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. மேற்­படி 5781 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது.
மேலும் இவ்­வாறு மின்­சார சபை நட்­டத்தில் இயங்­கு­வ­துடன் நிலக்கரி கொள்வனவு விலைமனு கோரலிலும் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

சென்ற வருடம் 1837 மில்­லியன் ரூபா இலா­ப­மீட்­டி­ய மின்­சார சபைக்கு இந்த வருடம் நடந்த கதி. சென்ற வருடம் 1837 மில்­லியன் ரூபா இலா­ப­மீட்­டி­ய மின்­சார சபைக்கு இந்த வருடம் நடந்த கதி. Reviewed by Madawala News on 7/25/2016 10:17:00 AM Rating: 5