Saturday, July 16, 2016

அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்ற உமர் பின் அமீன் (18)

Published by Madawala News on Saturday, July 16, 2016  | 

2016/7/16 அன்று சந்தோஷமாக கண் விழித்தவர்களை விட திடுக்கத்துடனும் கவலையுடனும் கண் விழித்தவர்களே அதிகம் இருப்பர். வெறுமனே 18 வயதுடன் பல்லாயிரக்கான   இதயங்களில் இடம் பிடித்து  இறையடி சேர்ந்தார் அக்குறனை நண்பர் உமர் பின் அமீன்.
.

அக்குறனை அமீன் அமீர்சாப் என்றால் அறியாதவர்கள் புரியாதவர்கள் தெரியாதவர்கள் சொற்பம். அவர்களின் மூன்றாவது மகன் உமர் .... தன் நாமத்திற்கு ஏற்றாற்போல் தனது குறுகிய வாழ்க்கை வட்டாரத்தை மஸ்ஜிதுடனும் அள்ளாஹ்வின் பாதையில் தியாகம் செய்வதிலும் செலவுசெய்தவர். சிரித்த முகத்துடன் இறுக்கமான முஸாபஹாவுடன் இரக்கமான முஆனகாவுடன் பேசுவது அவரின் குணங்களில் விஷேடமானது.

.
எப்போது பேசினாலும் இன்முகத்துடன் இம்மையை பேசி கதையை வளர்ப்பதை விட மறையாத மறுமையையும் தீனுடைய விடயங்கள், அள்ளாஹ்வின்  நிஃமத்துக்கள்,

வல்லமைகள் அண்ணலாரின் அழகிய சுன்னாக்கள் இதர மார்க்க விடயங்களைப் பேசுவதில் வல்லவர்.யாருக்கு எப்படி எந்த முறையில் மரியாதை கொடுத்து கண்ணியமாகவும் கௌரமாகவும் பணிவாகவும் பரிவாகவும் பேச வேண்டுமோ அதில்  வல்லவர்.
.
அள்ளாஹ்வின் பாதையில் அதி தீவிர ஆர்வம் காட்டும் இவர் அள்ளாஹ்வின் பாதையில் வருபவர்களையும் சகல வகையிலும் உதவுவதில் பெயர்போனவர். மஸ்ஜித் உட்பட அடுத்தவர்களின் வேலைகள் உதவிகள் செய்வதில் பிரியமானவர். தனது நற்பு வட்டத்தினுள்ளும் வெளியிலும் நுணுக்கமாக தஃவாவை செய்வதில் மகத்தானவர்..
.

கடைசியாக தான் நோன்பு லீவு முடித்து வெள்ளவத்தை இஸ்லாமியா மத்ரஸாவுக்காக செல்வதற்கு முன்னால் குடும்மபத்தவர்கள்,
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அறிந்த அறியாத அனைவரிடமும் ஸலாம் சொல்லி மன்னிப்பு வேண்டியவனாக தன் தாயிடம் பல முறை மன்னிப்புக் கேட்டு யாரிடமெல்லாம் மன்னிப்பு கேட்க கிடைக்கவில்லையோ அவர்களிடம் மன்னிக்கும்படி  சொல்லி விட்டு பல முறை தன் தாயை முத்தமிட்டு விட்டு தன்னுடைய மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டுச் சென்ற அண்பர் உமர் பின் அமீன் ஜனாஸாவாக மீண்டும் வீடு வந்தார் என்றும் சொல்லும்போது இதயம் கண்ணீர் விடுகிறது.
.
தனது பிரயாணத்தில் வாகனம் சற்று வேகமாக செல்லும்போது ஏனையோருக்கு கலிமா சொல்லும்படி கூறிய இவர் கடைசி நிமிடம் மற்றவர்களை கலிமா சொல்ல தூண்டியவனாக கலிமாவுடன் இவ்வுலகிற்கு விடை கொடுத்தார்
.

" இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்"

எட்டக்கும் மேற்பட்ட மத்ரஸாக்களுடைய மாணவர்கள்,
நூற்றக்கணக்கான ஆலிம்கள், தாயீக்கள், ஹாபிழ்கள் என பல்லாயிரக்கானோர் ஜனாஸாவுக்காக படை எடுத்தனர்..
.
இவர் ஒரு கபூல் செய்யப்பட்ட தாயீ என்பதற்கு தன்னுடைய இறுதி தரணத்திலும் ஏனையோரை கலிமா சொல்ல தூண்டிய செயற்பாடு பெரும் ஆதாரமாகும்.
.

ஜனாஸா தொழுகைக்காக என்றுமில்லாதவாரு அக்குறணை வரலாறு காணாதவாறு அக்குறனை தாய்ப்பள்ளியில் மூன்று மாடிகளிலும் வெளியிலும் மக்கள் வெள்ளம் படையெடுத்தது. அனைவர் நாவிலும் " சிறந்த அஹ்லாகான நல்ல ஸாலிஹான பிள்ளை" என்ற வாசகம் எதிரோலித்தது...! சுவனத்து வாலிபன் உமர் பின் அமீனின் மரணம் அவருக்கு சகல சந்தர்ப்பங்களி்லும் ஈடேற்றமாகவும் ஏனையோருக்கு ஹிதாயத்தாகவும் ஆகட்டுமாக ஆமீன்...
.

யாஅள்ளாஹ்...! உமரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸில் குடியமர்த்துவாயாக.ஆமீன்
.

குறிப்பு:  உமர் பின் அமீன் 👉 அகுரணை அமீன் அமீர்சாப்பின் மகன்.
.

அஷ்ஷேய்ஹ் உபைதுள்ளாஹ்
( றஹ்மானி),
அஷ்ஷேய்ஹ் உமைர் (பாரி) மற்றும் முஹம்மதின் உற்ற சகோதரன்.
.

உடத்தலவின்னை ஹகீமிய்யஹ் அரபுக்கல்லூரி அதிபர்
அஷ்ஷேய்ஹ் ஹிதாயதுள்ளாஹ் றஸீன் ( றஹ்மானி) இன் உற்ற சகோதரியின் மகன் "மருமகன்".
.

அஷ்ஷேய்ஹ் முஹம்மத் (இன்ஆமி),
அஷ்ஷேய்ஹ் முஸ்ஸம்மில் (றஷாதி) ஆகியோரின் மைத்துனன்.

✍என்றும் தங்கள் மேலான துஆவை வேண்டியவனாக....
.

எம்.றமழான் மர்ஸூக் (றஹ்மானி),   நெல்லியகம.
ramalanmarzook@gmail.com
0767406919
0712406919

# 2016/07/17


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top