Free Space

விடு­தியில் குளிர்பானம் அருந்­தி மயங்கிய 2 பிலிப்பைன்ஸ் பெண்களும் காத்தான்குடி பொலிஸாருக்கு வந்த சந்தேகமும்.



காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கல்­ல­டி­ பகுதி ஹோட்டல் விடு­தியில் குளிர்பானம் அருந்­திய இரண்டு வெளி­நாட்டு பெண்கள் திடீர் சுக­யீ­ன­ம­டைந்து மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த ஹோட்­ட­லுக்கு கடந்த 9 ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­யன்­று இரவு சென்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 25 மற்றும் 23 வய­து­டைய இரண்டு பெண்­க­ளுக்கு அந்த விடு­தியில் குளிர்­பானம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து திடீர் சுக­யீ­ன­ம­டைந்த இந்த இரண்டு வெளி­நாட்டு பெண்­களும் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் மயக்­க­மான நிலையில் அங்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரிய வந்­துள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர்.

இது தொடர்­பாக கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் காத்­தான்­குடி பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லை­ய­டுத்து காத்­தான்­குடி பொலிஸார் இந்த இரண்டு வெளி­நாட்டு பெண்­க­ளி­டமும் விசா­ர­ணை­களை மேற்கொண்­டனர்.

இதை­ய­டுத்து இவர்­க­ளுக்கு குளிர்­பானம் வழங்­கி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த இரண்டு இளை­ஞர்­களை காத்­தான்­குடி பொலிஸார் கைது செய்­துள்­ள­துடன் தொடர்ந்து விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

இந்த இரண்டு வெளி­நாட்டு பெண்­க­ளுக்கும் குளிர்­பா­னத்தில் மயக்க மருந்து வழங்கப்பட்டு அவர்களை மயக்கமடையச் செய்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாமென சந்தேகிப்பதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விடு­தியில் குளிர்பானம் அருந்­தி மயங்கிய 2 பிலிப்பைன்ஸ் பெண்களும் காத்தான்குடி பொலிஸாருக்கு வந்த சந்தேகமும். விடு­தியில் குளிர்பானம் அருந்­தி மயங்கிய 2 பிலிப்பைன்ஸ் பெண்களும் காத்தான்குடி பொலிஸாருக்கு வந்த சந்தேகமும். Reviewed by Madawala News on 7/12/2016 10:54:00 AM Rating: 5