Ad Space Available here

அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஏறாவூருக்கான உதவிகள் ...


புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (15) ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சீ. பாத்திமா றமீஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு பொருட்களை கையளித்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் வேண்டுகோளுக்கினங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்கள் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள கழகங்கள், பள்ளிவாசல்கள், சங்கங்கள் என 12 பொது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஏறாவூருக்கான உதவிகள் ... அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஏறாவூருக்கான உதவிகள் ... Reviewed by Madawala News on 7/15/2016 06:35:00 PM Rating: 5