Sunday, July 24, 2016

2020 வரை இவ்வரசை கலைக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை ...

Published by Madawala News on Sunday, July 24, 2016  | 


கண்டியிலிருந்து கொழும்பிற்கு பாதயாத்திரை மேற்கொள்வதால் இவ்வரசை கவிழ்க்க இயலாது. அரசை மாற்ற 2020 வரை காத்திருக்க வேண்டும்.

மக்கள் ஆகஸ்ட் 17ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியை பிரதானமாகக் கொண்ட இவ்வரசை நிறுவினார்கள். இவ்வரசு 5 வருடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அரசியல் யாப்பின்படி 4 வருடங்கள் 6 மாதங்கள் முடிவடையும் வரை ஜனாதிபதிக்கு இவ்வரசாங்கத்தை கலைக்கக் கூடிய அதிகாரம் இல்லை..

இவ்விடயம் தெளிவாக இருக்கும்போது, அதிகாரப் பேராசை, களவு மற்றும் மோசடி ஆகியவைகள் கண்டு பிடிக்கப்பட்டு சிறைக்கு செல்ல நேரிடும் எனப்பயந்து சிலர் அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள்.

கண்டியிலிருந்து கொழும்பிற்கு பாதயாத்திரை வருவதால் அரசை கவிழ்க்க முடியாது.சந்தியொன்றில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதால் அரசு கலைவதில்லை.

சதி மேற்கொண்டாலும் அரசு கவிழப் போவதில்லை. அரசை கவிழ்ப்பதற்கு 2020 தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கொலொன்னாவையில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக சீமெந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார்.  


2018ம் ஆண்டாகும்போது இந்நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு நாம் முயற்சி செய்கிறோம். அதனுடன் இணைந்தாற்போல் 2019-2020ல் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு, தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு, சம்பளத்தை அதிகரிக்கும் போது இக்கும்பலுக்கு 2020ம் ஆண்டிலும் கூட ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போகும். இப்பொழுது அரசை கவிழ்க்க வேண்டும் எனும் அவசரத்தை கொண்டுள்ள மஹிந்த அவர்கள் அரசை கவிழ்க்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளும் நடவடிக்கைககளை செயற்படுத்த பஸில் ராஜபக்ஸ அவர்களுக்கு பொறுப்பளித்துள்ளார்.


யார் இந்த பஸில் ராஜபக்ஸ? தேர்தலில் தோல்வியுற்றதும் அமெர்க்காவுக்கு சென்றவரே இந்த பஸில் ராஜபக்ஸ என்பவர். அவ்வாறின்றேல் வழக்கு மன்றினால் சிறை வைக்கப்பட்ட உடன் மருத்துவமனையில் தஞ்சம் புகுபவர். அடுத்த கிழமை கண்டியிலிருந்து கொழும்பிற்கு பாதயாத்திரை மேற்கொள்ள இருந்தவர் திடீரென சுகவீனமுற்றுள்ளார். இவ்வாறு நடைபெறும்போது, இவர் கண்டியிலிருந்து பிலிமத்தலாவைக்கு வந்து சேர முன்னர் எங்கேயாவது விழுந்து விடுவாரோ என எண்ணத் தோன்றுகின்றது.கள்வர்களுக்கு  உரிய தண்டனை வழங்க வேண்டியது இவ்வரசின் பொறுப்பென நாம் நம்புகிறோம்.

ஓரு வருடத்திற்கு மேல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணைகளின் பெறுபேறுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிறைக்கு செல்வதற்கும் சிறைக்கு செல்வதற்கும் ஒரு பிரிவினர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இன்னும் சிலர் விடுமுறையொன்றாக அதை கழிக்கின்றனர். களவெடுத்து சிறைக்கு செல்பவர்கள் வெளியே வரும்போது வீரர்கள் போன்று கையசைத்துக் கொண்டு வருகின்றனர். 700 இலட்சத்தை களவெடுத்துவிட்டு சிறைக்கு சென்றவர், வெளியே வரும்போது மக்களுக்காக போராடி சிறைக்கு சென்ற வீரனைப் போன்று கையசைத்துக் காட்டிக் கொண்டு வெளியே வருகிறார். 

இக்கூத்துக்களை எமது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் இந்நிகழ்வுகளை மிகவும் வெறுப்புடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.
 
 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top