Accaddemy

மன­நலம் பாதிக்­கப்­பட்ட 21 வய­து இளை­ஞனை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த அட்­டா­ளைச்­சேனை நபர் கைது.



மன­நலம் பாதிக்­கப்­பட்ட 21 வய­து­டைய இளை­ஞனை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த அம்­பாறை, அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தைச் சேர்ந்த 44 வய­து­டைய முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒரு­வரை நேற்று வியா­ழக்­கி­ழமை காலை கைது செய்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.


இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அக்­க­ரைப்­பற்று 13 ஆம் பிரி­வி­லுள்ள 21 வய­து­டைய மன­நலம் பாதிக்­கப்­பட்ட இளைஞர் சம்­ப­வ­தி­ன­மான புதன்­ கி­ழமை காலை 10 மணி­ய­ளவில் வீதியால் சென்று கொண்­டி­ருந்­த­போது பின்னால் வந்த முச்­சக்­க­ர­வண்டி சாரதி எங்கு போகின்றாய் என வினவிய பின்னர் அவரை முச்­சக்­க­ர­வண்­டியில் ஏற்றிச் சென்­றுள்ளார்.

பின் அப்­ப­கு­தி­யி­லுள்ள பாழ­டைந்த வீடு ஒன்றில் வைத்து பாலியல் துஷ்­பி­யோகம் மேற்­கொண்­டு­விட்டு 40 ரூபா பணத்தை வழங்கி வீட்­டிற்கு செல்­லு­மாறு கூறி அங்­கி­ருந்து முச்­சக்­க­ர­வண்டி சாரதி சென்­றுள்ளார் என பொலி­ஸாரின் ஆரம்ப விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட இளைஞர் வீடு சென்று தனக்கு நடந்­ததை கூறி­ய­தை­ய­டுத்து பெற் றோர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து அட்­டா­ளைச்­சேனையைச் சேர்ந்த 44 வயதுடைய  முச்­சக்­க­ர­வண்டி சார­தியை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள் ளதுடன் பாதிக்கப்பட்ட இளைஞனை அக் கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மன­நலம் பாதிக்­கப்­பட்ட 21 வய­து இளை­ஞனை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த அட்­டா­ளைச்­சேனை நபர் கைது. மன­நலம் பாதிக்­கப்­பட்ட 21 வய­து இளை­ஞனை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த அட்­டா­ளைச்­சேனை நபர் கைது. Reviewed by Madawala News on 7/22/2016 10:16:00 AM Rating: 5