Free Space

(படங்கள்) மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டாரில் இருந்து விடுமுறையில் வந்த முஹம்மட் சியாம் (வயது 23) வபாத்.

அனா

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பணிச்சங்கேணி பிரதேசத்தில் இன்று (11.07.2016) அதிகாலை 12.20 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த நண்பபகள் திருகோணமலைக்குச் சென்று வாழைச்சேனைக்கு வந்து கொண்டிருக்கும் சந்தர்பத்திலயே பணிச்சங்கேணி சல்லித்தீவு சந்தியில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி வலைவில் விழுந்ததாலயே இவ் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சிறாச் வீதியை சேர்ந்த அசனார் முஹம்மட் சியாம் (வயது 23) என்பவர் மரணமடைந்துள்ளதுடன்,
.

பிறைந்துரைச்சேனை பன்சல வீதியை சேர்ந்த மையன் இர்பான் (வயது – 25) என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
.

மரணமடைந்தவரின் ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையை கோறளைப்பற்று திடீர் மரண விசாரனை அதிகாரி வீ.ரமேஸ் ஆணந்தன் நடாத்தியதுடன் பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.காலித் நடாத்தினார் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
.
இச் சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.

 நோன்புப் பெருநாள் விடுமுறைக்காக கட்டாரிலிருந்து நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இவரின் மறுமை வாழ்வுக்காக நாமும் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

மேலதிக தகவல்: யாகூப் பைரூஸ்


(படங்கள்) மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டாரில் இருந்து விடுமுறையில் வந்த முஹம்மட் சியாம் (வயது 23) வபாத். (படங்கள்) மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டாரில் இருந்து விடுமுறையில் வந்த முஹம்மட் சியாம் (வயது 23) வபாத். Reviewed by Madawala News on 7/11/2016 04:59:00 PM Rating: 5