Free Space

நாமலுக்காக 25 சட்டத்தரணிகள் நேற்று மன்றில் ஆஜர்..


வரும் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்‌ஷ கொழும்பு மெகசின் சிறைச்சலையில் E Ward. இல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நிதி மோசடியி குற்றச்சட்டில் கைது செய்யப்பட்ட முகம்மது முஸம்மில் உற்பட இருபது பேர் இந்த குறித்த வார்ட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தாஜுதீன் கொலை வழக்கில் நாமல் கைது செய்யப்படுவார் என பல அமைச்சர்கள் கூறி வந்த நிலையில் நிதி முறைகேடு தொடர்பில் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

கொழும்பு கோல் பேஸில் இருந்த ராணுவ முகாம் அமைந்திருந்த நான்கரை ஏக்கர் கானியை இந்திய நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்க கைமாறாக குறித்த நிறுவனம் 70 மில்லியன் ரூபா பணத்தை ரக்பி போட்டிகளுக்கு அனுசரனையாக வழங்கியதாகவும். அந்த பணத்தை நாமல் முறைகேடாக பயன்படுத்திமை தொடர்பில் விசாரனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நாமல் கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்றைய தினம் நாமல் சார்பாக 25 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜரான நிலையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ள போதும் குறித்த இந்திய நிறுவனம் நிமல் பெரேரா என்பரின் மூன்று வங்கி கணக்குகளில் பணம் வைப்பில் இட்டுள்ளதாகவுன் அவரே நாமலுக்கு அந்த பணத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக யோசித கைதான கோசை போல இதுவும் நீண்டகாலம் இழுபறியாகும் என தெரிவிக்கப்படுகிறது.


நாமலுக்காக 25 சட்டத்தரணிகள் நேற்று மன்றில் ஆஜர்.. நாமலுக்காக 25 சட்டத்தரணிகள் நேற்று மன்றில் ஆஜர்.. Reviewed by Madawala News on 7/12/2016 09:42:00 AM Rating: 5