Free Space

அவசரமாக தரையிறக்கப்பட்ட சவூதி விமானம்.. 258 பயணிகள் தப்பினர்.



சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 258 பயணிகள் உயிர்தப்பியுள்ளனர்.

சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்  இன்று காலை 11.40 மணியளவில் 258 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஜித்தா நோக்கி புறப்பட்டது.

இந்நிலையில் சிறிது நேரத்திலே இந்த விமானத்தில் தொழிநுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

12.10 மணியளவில் அந்த விமானம் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 258 பயணிகள் உயிர்த்தப்பினர்.

இந்த விமானத்தின் கோளாறுகளை சரி செய்யும் பணி நடந்து வரும் நிலையில், கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.<
அவசரமாக தரையிறக்கப்பட்ட சவூதி விமானம்.. 258 பயணிகள் தப்பினர்.  அவசரமாக தரையிறக்கப்பட்ட சவூதி  விமானம்.. 258 பயணிகள் தப்பினர். Reviewed by Madawala News on 7/19/2016 08:05:00 PM Rating: 5