Accaddemy

(படங்கள்) ஒரே தண்டவாளத்தில் வந்த இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி, 25 பேர் பரிதாப மரணம்.



இத்தாலியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். இத்தாலியின் தெற்குபகுதியில் உள்ள புக்லியா என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரே தண்டவாளத்தில் வந்த 2 பயணிகள் ரயில்கள் பயங்கரமாக மோதிக் கொண்டது. இதில் 4 பெட்டிகள் நொறுங்கின. இந்த கோர விபத்தில் 25 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து இத்தாலிய பிரதமர் மேட்டியோ ரென்ஸி வருத்தம் தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 2 ரயில்களும் ஒரே  தண்டவாளத்தில் வந்ததற்கான காரணம் குறித்து இத்தாலி ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  
Photo published for Italy train crash probe examining antiquated train control







(படங்கள்) ஒரே தண்டவாளத்தில் வந்த இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி, 25 பேர் பரிதாப மரணம். (படங்கள்) ஒரே  தண்டவாளத்தில் வந்த இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி, 25 பேர் பரிதாப மரணம். Reviewed by Madawala News on 7/13/2016 02:30:00 PM Rating: 5