30 இலட்ச தங்கத்தை சப்பாத்துக்குள் வைத்து கொண்டு வந்த கட்டுகஸ்தோட்டை நபர். s



சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க துண்டுகளை, ஆறு பாதணிகளுக்குள் மறைத்துவைத்து நாட்டுக்குள் கடத்த முயன்றவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இந்தியா, மும்பையிலிருந்தே அவர், தங்கத்தை கடத்தியுள்ளார் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயது கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்தவர் எனவும் 600 கிராம் தங்கம் கொண்டு வரப்பட்டதாகவும்  தெரிவித்த சுங்கப்பிரிவினர், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
30 இலட்ச தங்கத்தை சப்பாத்துக்குள் வைத்து கொண்டு வந்த கட்டுகஸ்தோட்டை நபர். s 30 இலட்ச  தங்கத்தை சப்பாத்துக்குள் வைத்து கொண்டு வந்த கட்டுகஸ்தோட்டை நபர். s Reviewed by Madawala News on 7/14/2016 10:08:00 AM Rating: 5