Oceas

கெஷ்மீரில் தொடர்ந்து நான்காவது நாளாக கலவரம்: இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் 30 பேர் பலி பலர் கண்பார்வை இழக்கும் அபாயம் ...


காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து  அங்கு கலவரம் வெடித்தது. 

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் 'ஏயார் கன்'னால் தாக்குதல் நடத்தியதில் 92 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் 19  பேருக்கு பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2010 ம் ஆண்டு, காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 112 பேர் பலியாகினர். இதையடுத்து அப்போதைய காங்கிரஸ் அரசு,  உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கலகம் அடக்க ஏயார் துப்பாக்கியை பயன்படுத்துமாறு ரானுவத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியது .
சிறிய அளவிலான இதன் குண்டுகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காத போதும் இவை கண்ணில் பட்டால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் புர்ஹான் கொல்லப்பட்டதையடுத்து கடந்த 4 நாட்களாக காஷ்மீரில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதுவரை 30 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் 'ஏர் கன்'னைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கண்களில் குண்டு பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இதில் 19 பேருக்கு, பார்வை முற்றிலும் இழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
கெஷ்மீரில் தொடர்ந்து நான்காவது நாளாக கலவரம்: இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் 30 பேர் பலி பலர் கண்பார்வை இழக்கும் அபாயம் ... கெஷ்மீரில் தொடர்ந்து நான்காவது நாளாக கலவரம்: இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் 30 பேர் பலி பலர் கண்பார்வை இழக்கும் அபாயம் ... Reviewed by Madawala News on 7/12/2016 04:57:00 PM Rating: 5