Accaddemy

300 மாணவிகள் தங்கியுள்ள பல்கலைக் கழக விடுதியில் கள்வன் புகுந்ததால் ஆர்பாட்டம்.



ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நேற்றுமாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 300 மாணவிகள் தங்கியுள்ள பகுதிக்கு கள்வன் ஒருவன் புகுந்தமை தொடர்பிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நான்கு மாடிக்கட்டிடங்களை கொண்ட இந்த தங்குமிடத்தில் புகுந்த கள்வன், மாணவிகளின் 8 கையடக்க தொலைபேசிகளை களவாடி சென்றுள்ளான்.

தங்குமிடத்தின் ஜன்னல்களை உடைத்தே கள்வன் உள்நுழைந்துள்ளான்.

இதன்போது அவன், மாணவிகளுக்கு தொந்தரவுகளை செய்யவில்லை.

கள்வனை கண்ட மாணவி ஒருவர், நடுநிசியில் திடீரென்று எழுந்து கூச்சலிட குறித்த கள்வன் தப்பிச்சென்றுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுகிறது.

இதன்போது ஒரு பெண் பாதுகாப்பு ஊழியரே பணியில் இருந்துள்ளார்.

எனினும் அவர் உறக்கத்தில் இருந்தமையால் அவரால் கள்வனை பிடிக்கமுடியவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.
300 மாணவிகள் தங்கியுள்ள பல்கலைக் கழக விடுதியில் கள்வன் புகுந்ததால் ஆர்பாட்டம்.  300 மாணவிகள் தங்கியுள்ள பல்கலைக் கழக விடுதியில் கள்வன் புகுந்ததால் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 7/04/2016 01:40:00 PM Rating: 5