Accaddemy

பல்லேகல மைதானத்தில் நிர்வாணமாக ஓடியவருக்கு ஒருவாரம் சிறை 3000 அபராதம் !


இலங்கை அவுஸ்ரேலிய போட்டியில் நிர்வாணமாக ஓடிய வெளிநாட்டவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேக மைதானத்தில்,செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல்நாள் முடிவில் பின்னடைவைச் சந்தித்துத் தடுமாறிக்கொண்டிந்த நிலையில், வெளிநாட்டு பிரஜையொருவர், உடம்பில் ஒருதுண்டு துணியில்லாமல், மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்துள்ளார்.மழை பெய்துகொண்டிருந்த போதே அவர், மைதானத்தைச் சுற்றி நிர்வாணமாக ஓட்டமெடுத்திருந்தார்.

இதனை அவதானித்த பொலிஸார், அவரை கைது செய்து நீதிமன்றில்  ஆஜர்படுத்தியபோது அவருக்கு ஒரு வார சிறை தண்டனையும் 3000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பல்லேகல மைதானத்தில் நிர்வாணமாக ஓடியவருக்கு ஒருவாரம் சிறை 3000 அபராதம் ! பல்லேகல மைதானத்தில் நிர்வாணமாக ஓடியவருக்கு ஒருவாரம் சிறை 3000 அபராதம் ! Reviewed by Madawala News on 7/27/2016 06:29:00 PM Rating: 5