பலரையும் சோகத்தில் விட்டு பிரிந்து சென்ற ராஸி முகம்மத் (30)



'கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் Razi Mohamed ( ராஸி முகம்மத் (30)  நேற்று இரவு  (18) திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வபாத்தானர்

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் ஸாஹிராக் கல்லூரியின் 2005 ஆண்டு பிரிவை சேர்ந்தவரும், பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகவும் கடமையாற்றி இருந்தார்.

யா ரஹ்மானே ! உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த மாளிகையில் வாழ்ந்தாலும் வயதெல்லையின்றி மரணம் என்ற பிடியிலிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ளவே முடியாதென்பதை ஏற்றுக் கொள்கிறோம் கருணையாளனே.. நீ நாடினால்
இந்த நிமிடமும் எமது உயிர் பிரியலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம் ரப்பே ..

மரணத்தை சுவைப்பதில் நாம் ஒருபோதும் அஞ்சவில்லை . நாங்கள் பலவீனமானவர்கள் யா அல்லாஹ்.. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உனக்கு மாறு செய்திருக்கிறோம் ரஹ்மானே . எங்களது கவலை, அச்சம் அனைத்தும் எங்களது பாவங்களை மன்னித்து , எங்களை நீ பொருந்திக் கொண்ட நிலையில் எங்களது ரூஹை கைப்பற்றுவாயாக . திடீர் மரணங்களிருந்தும் எம்மைப் பாதுகாத்தருள்வாயாக ..

அவரின் பிரிவினால் கவலையிரும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்  ஆறுதல் அளித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவாயாக.

தகவல்: சஜாத்  காசிம் 
பலரையும் சோகத்தில் விட்டு பிரிந்து சென்ற ராஸி முகம்மத் (30) பலரையும் சோகத்தில் விட்டு பிரிந்து சென்ற ராஸி முகம்மத் (30) Reviewed by Madawala News on 7/19/2016 01:48:00 AM Rating: 5