விபத்தில் காயமடைந்த நவ்சார் மவ்லவி (32) வபாத்தானர்.



கடந்த நோன்புப் பெருநாளை அண்டிய தினம் ஒன்றில் விபத்துக்குள்ளான மாவனல்லை உயன்வத்த பகுதியை சேர்ந்த நவ்சார் மவ்லவி (32 வயது ) கண்டி வைத்தியசாலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

கட்டுகஹவத்த மஸ்ஜிதுள் உமர் பள்ளிவாயலில் பேஷ் இமாமாக கடமையாற்றும் இவர் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொது விபத்துக்குள்ளானதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மனைவி ஓரிரு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியாகியுள்ளார்.

குறிப்பிட்ட மவ்லாவியின் தாயார் சில மாதங்களுக்கு முன்னர் கட்டுகஸ்தோட்டை ஆற்றில் வேன் புரண்டத்தில் வபாத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவனல்லை இக்பால் -
அல் மஷூரா -
விபத்தில் காயமடைந்த நவ்சார் மவ்லவி (32) வபாத்தானர். விபத்தில் காயமடைந்த நவ்சார் மவ்லவி (32) வபாத்தானர். Reviewed by Madawala News on 7/22/2016 09:08:00 AM Rating: 5