Yahya

கறை படிந்த கறுப்பு ஜூலை.. (33 வருடங்கள் ஆகியும் ஆறாத வடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்)கட்டுரை : பி. மாணிக்கவாசகம்.

முப்­பத்தி மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் அன்­றைய தினமும் இது­போன்­ற­தொரு சனிக்­கி­ழ­மைதான். இரவு 11.30 மணி­ய­ளவில் யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி தபால் பெட்டிச் சந்­தியில் இரா­ணுவ வாகனத் தொட­ரணி ஒன்றின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் ஒரு அதி­காரி உட்­பட 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர்.

பலா­லியில் இருந்து யாழ்ப்­பாணம் கோட்­டையை நோக்கி சென்று கொண்­டி­ருந்த இரா­ணுவ ஜீப் மற்றும் ட்ரக் வண்­டி­யொன்றின் மீதே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. முன்னால் சென்று கொண்­டி­ருந்த ஜீப் கண்­ணி­வெடி தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யதில் இரண்டு இரா­ணு­வத்­தினர் காய­ம­டைந்­தனர். அவர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக பின்னால் வந்த இரா­ணுவ ட்ரக் வண்­டியில் இருந்து இறங்­கிய இரா­ணு­வத்­தினர் மீது மறைந்­தி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் சர­மா­ரி­யாகத் துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­ததன் கார­ண­மா­கவே இந்த அனர்த்தம் நேர்ந்­தது.

இந்தத் தாக்­கு­தலில் 13 இரா­ணு­வத்­தி­ன­ருடன் விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கி­யஸ்­த­ரா­கிய செல்­லக்­கிளி அம்­மானும் கொல்­லப்­பட்­டார்.
விடு­த­லைப்­பு­லி­க­ளினால் இரா­ணு­வத்­தினர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது பெரும் தாக்­குதல் இது என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. இந்தத் தாக்­கு­தலே 1983 ஜூலை கல­வ­ரத்­திற்கு வித்­திட்­டி­ருந்­தது.

அர­சாங்­கத்­திற்கு எதி­ரான தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது பெரிய தாக்­குதல் இது­வாகும். அது மட்­டு­மல்ல; தமிழ் இளை­ஞர்­களின் வீரம், சுமார் 30 வருட கால யுத்­தத்­திற்கு இந்தச் சம்­ப­வமே பிள்­ளையார் சுழி­யிட்­டி­ருந்­தது.

ஆயினும் இந்தத் தாக்­கு­தலின் உட­னடி எதிரொ­லி­யாக கொழும்பு பொரளையில் உரு­வா­கிய இனக்­க­ல­வரம் ஆடிக்­க­ல­வ­ர­மாக உரு­வெ­டுத்து தமிழ் மக்­களின் உயிர்கள், உட­மைகள் என்­ப­வற்றைப் பெரிய அளவில் அழித்­தொ­ழித்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த தாக்­குதல் சம்­ப­வத்­திற்கு மறு­நா­ளா­கிய ஜூலை மாதம் 24 ஆம் திகதி பர­விய காட்டுத் தீ போன்ற வதந்­திகள் கொழும்பு மாந­க­ரத்தைச் சுடு­கா­டாக்­கி­யது. இந்த நிலைமை 30 ஆம் திகதி வரையில் மிக மோச­மாகத் தொடர்ந்­தது.
கொல்­லப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரை அவர்­களின் குடும்­பத்­தி­ன­ரிடம் கைய­ளிப்­ப­தற்குப் பதி­லாக பொரளை மயா­னத்தில் இறு­திக்­கி­ரி­யை­களை நடத்­து­வது என்றும் அதில் அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன, பிர­தமர் ரண­சிங்க பிரே­ம­தாசா மற்றும் அமைச்­ச­ர­வை­யினர் கலந்து கொள்­வது என்றும் அவ­ச­ர­மாகக் கூடிய அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஆனால், இந்தத் தாக்­குதல் பற்றி பர­விய பல்­வேறு வகை­யான தக­வல்கள் வதந்­தி­க­ளினால் பொரளை கனத்தை பகு­தியில் மூவா­யிரம் பேர­ளவில் கூடினர். கொல்­லப்­பட்ட இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய சட­லங்­களை அவர்­க­ளு­டைய உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டும் என்­பதே அவர்­களின் கோரிக்­கை­யாக இருந்­தது.

யாழ்ப்­பாணம் பலா­லியில் இருந்து இரத்­ம­லானை விமா­னத்­தளம் ஊடாக பொரளை மயா­ன­பூ­மிக்கு மாலை 5 மணிக்கு வந்து சேரும் என எதிர்­பார்க்­கப்­பட்ட இரா­ணுவ சட­லங்கள் இரவு 8.30 மணி­ய­ள­வி­லேயே இரத்­ம­லானை விமான தளத்­திற்கு வந்து சேர்ந்­தன. அங்­கி­ருந்து அந்த சட­லங்கள் இரா­ணுவ தலை­மை­ய­கத்­திற்கு எடுத்துச் செல்­லப்­பட்டு மேலும் தாம­த­மா­கிய அதே­வேளை, பொரளை பகு­தியில் கூடி­யி­ருந்த கூட்டம் ஆயி­ரக்­க­ணக்கில் அதி­க­ரித்து, எண்­ணா­யி­ரத்தைத் தாண்­டி­யது.

பொரளை பகு­தியில் உள்ள சேரிப்­ப­குதி மக்­களே முதலில் அங்கு ஆயி­ரக்­க­ணக்கில் கூடினர். அதனைத் தொடர்ந்து நேரம் செல்லச் செல்ல வேறு இடங்­களில் இருந்தும் மக்கள் அங்கு வந்து குழு­மினர். முடிச்­சு­மா­றிகள், குற்றச் செயல்­க­ளையே தமது ஜீவ­னோ­பா­ய­மாகக் கொண்­டி­ருந்த குழு­வி­னரும் கூட்­டத்தில் கலந்து கொண்­டனர். குடும்­பங்­க­ளிடம் சட­லங்­களை ஒப்­ப­டைக்க வேண்டும் என்று கோஷ­மிட்டுக் கொண்­டி­ருந்த கூட்டம் ஆவேசம் கொண்­டது. கலகம் அடக்கும் பொலிஸார் கண்­ணீர்ப்­பு­கைக்­குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தினர்; குண்­டாந்­த­டி­யடிப் பிர­யோ­கமும் நடத்­தப்­பட்­டது,

கலகம் அடக்கும் பொலி­ஸா­ரினால் கல­வ­ரத்தை அடக்க முடி­ய­வில்லை. நிலைமை கட்­டுக்­க­டங்­காமல் போகவே, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் பொறுப்பு கைய­ளிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து வானத்தை நோக்கித் துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தப்­பட்­டது. கூட்டம் கலைந்­தது. ஆனால் அமைதி ஏற்­ப­ட­வில்லை.
கலைந்த கூட்டம் பொரளை நகரில் உள்ள தமிழ்க்­க­டை­களைத் தாக்­கி­யது தமி­ழர்கள் பெரும் எண்­ணிக்­கையில் வாழ்ந்த அடுக்கு வீடு­களும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கின. பொரளையில் இருந்து படிப்­ப­டி­யாக தமி­ழரைத் தாக்கும் காடையர் கூட்டம் பெருகி கொழும்பு நகரின் பல இடங்­க­ளுக்கும் பரவிச் சென்று தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.

இந்த நிலைமை 30 ஆம் திகதி வரையில் ஒரு கிழமை நீடித்­ததில் சுமார் மூவா­யிரம் பேர் கொல்­லப்­பட்­டனர். பலர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கினர் தமிழ் மக்­களின் வர்த்­தக சொத்­துக்கள் கொழும்பில் மட்­டு­மல்­லாமல் மலை­யகம் உட்­பட தெற்கில் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பல நக­ரங்­க­ளிலும் அடித்து நொறுக்­கப்­பட்­டன. தீயிட்டு அழிக்­கப்­பட்­டன கோடிக்­க­ணக்­கான சொத்­துக்கள் நாச­மாக்­கப்­பட்­டன.

ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் அக­தி­க­ளா­கினர். கொழும்பின் பல இடங்­க­ளிலும் அகதி முகாம்கள் உரு­வா­கின. இந்­தி­யாவில் இருந்து வருகை தந்த கப்­பலில் கடல் மார்க்­க­மாக தமி­ழர்கள் வட­ப­கு­திக்கு – யாழ்ப்­பா­ணத்திற்கு கொண்டு செல்­லப்­பட்­டார்கள் என்­பதை விட விரட்டி அடிக்­கப்­பட்­டனர் என்றே கூற வேண்டும்.

ஜூலை கல­வரம் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பே சிறு சிறு இனக்­க­ல­வர அசம்­பா­வித சம்­ப­வங்கள் நடை­பெற்­றி­ருந்­தன. அதே­போன்று 1958 ஆம் ஆண்டு சிங்­களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்­பட்­டதைத் தொடர்ந்து வாக­னங்­களில் சிங்­கள எழுத்­தா­கிய ஸ்ரீ என்ற எழுத்து சிங்­க­ளத்தில் பொறிக்­கப்­பட்­டது. இதனைத் தமிழில் பொறிக்க முற்­பட்­டனர் சிலர். சிங்­களம் மட்­டுமே அரச கரும மொழி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ்ப் பெயர்­க­ளுக்கு தார் பூசி அழிக்­கப்­பட்­டது. சில இடங்­களில் சிங்­களப் பெயர்­க­ளுக்கு இந்தக் கதி­யேற்­பட்­டது,

கறுப்பு ஜூலை கல­வ­ரத்­தின்­போது மண்­ணெண்ணெய் மற்றும் பெற்ரோல் கொள்­க­லன்­க­ளு­டனும் பொல்­லுகள், கோட­ரி­க­ளு­டனும் திரிந்­தது போன்று 1958 ஆம் ஆண்டு தார் நிரப்­பிய வாளி­க­ளு­டனும் வாள்கள், கத்­தி­க­ளு­டனும் காடையர் கூட்டம் திரிந்­தது பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ் மொழியைக் கண்ட இடத்தில் தார்­பூசி அழித்­தது மட்­டு­மன்றி கண்ணில் அகப்­பட்ட தமி­ழர்­களைத் தாக்­கியது. பல இடங்­களில் கொதிக்க வைத்த தார் நிறைந்த பரல்­களில் பலரைத் தூக்கிப் போட்டு இனந்­தெ­ரி­யாத கார­ணத்­திற்­காகப் பழி வாங்­கி தங்­க­ளு­டைய கோபத்தைத் தீர்த்துக் கொண்­டனர்.

ஆனால், கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் போது வீடு­க­ளிலும் கொட்­டில்­க­ளிலும் வர்த்­தக நிலை­யங்­க­ளிலும் இருந்­த­வர்கள் உள்ளே இருக்­கத்­தக்­க­தாக தீயிட்டு கொளுத்­தப்­பட்­டார்கள்; அப்­பா­வி­க­ளான தமி­ழர்கள் மீது அடை­யா­ளமே தெரி­யாத சிங்­களக் காடை­யர்கள், உட­மை­களைக் கொள்­ளை­யிட்டும், தாக்­குதல் நடத்­தியும், தீயிட்டும் தமது கார­ணமே இல்­லாத கோபத்தைத் தீர்த்துக் கொண்­டார்கள். சம்­பந்­தமே இல்­லாத ஒரு செய­லுக்­காக பழி தீர்த்துக் கொண்­டார்கள்.
கறுப்பு ஜூலை கல­வ­ரத்­திற்கு முன்­ன­தாக தமிழ் தரப்­பி­ன­ருக்கும் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன அரச தரப்­பி­ன­ருக்கும் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் பிணக்கு கார­ண­மாக தெருச்­சண்­டியர் பாணியில் இய­லு­மென்றால் மோதிப்­பா­ருங்கள். போர் என்றால் போர். சமா­தானம் என்றால் சமா­தானம் என்று ஜனாதி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன சூளு­ரைத்­தி­ருந்தார்.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே கறுப்பு ஜூலை கல­வரம் வெடித்­தி­ருந்­தது. இந்தக் கல­வ­ரத்தின் மூலம் சிங்­கள இனமே கூனிக்­கு­றுகத் தக்க வகையில் வன்­செ­யல்கள் தலை­விரித்தாடின. உட­ன­டி­யாக ஊர­டங்கு சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும், நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டினுள் கொண்டு வர முடி­ய­வில்லை. மாறாக வெலிக்கடை சிறைச்­சா­லைக்கும் கல­வரம் பர­வி­யது. அங்கு தமிழ்க்­கை­திகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­ சம்­ப­வங்­களில் 50க்கும் மேற்­பட்ட தமிழ் அர­சியல் கைதிகள் சித்­தி­ர­வதை செய்து காட்டு மிராண்டித் தன­மாகக் கொல்­லப்­பட்­டனர்.

வெலிக்­கடை சிறைச்­சாலை படு­கொலை­யா­னது கறுப்பு ஜூலை கல­வ­ரத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் உச்ச கட்ட காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

கறுப்பு ஜூலை கல­வ­ர­மா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்சிக் காலத்­தி­லேயே இடம்­பெற்­றது. இதேபோன்று ஐக்­கிய தேசியக் கட்சி அதி­கா­ரத்தில் இருந்த போதே, யாழ்ப்­பா­ணத்தில் 1981 ஆம் ஆண்டு தமி­ழரின் கலா­சாரப் பொக்­கி­ஷ­மாக விளங்­கிய யாழ் நூலகம் எரி­யூட்­டப்­பட்­டது.
இந்த நாட்டின் இனப்­பி­ரச்­சி­னை­யா­னது, வன்­முறை மட்­டத்­திற்கு உயர்­வ­தற்கும், தமிழ் இளை­ஞர்கள், தமி­ழர்­களை அரச பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கு­மாக ஆயு­த­மேந்­து­வ­தற்கு தீவி­ர­மான தூண்­டு­தலை அளிப்­ப­தற்கும் கறுப்பு ஜூலை கல­வ­ரமும், யாழ். நூலக எரிப்­புமே முக்­கிய சம்­ப­வங்­க­ளாக அமைந்­தன.

யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் இரா­ணு­வத்­தினர் மீது விடு­த­லைப்­பு­லிகள் நடத்­திய தாக்­கு­தலே கறுப்பு ஜூலை கல­வ­ரத்­திற்கு தூண்­டு­கோ­லாக அமைந்­தது என்­பது மேலோட்­ட­மான கார­ண­மாக இருந்த போதிலும், கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் ஊடாக தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இனச்­சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வ­தற்கு ஏற்­க­னவே அரச தரப்பில் ஒரு திட்டம் இருந்­தது என்ற விடயம் கறுப்பு ஜூலை கல­வரம் பற்­றிய விசா­ர­ணை­களின் போது வெளிப்­பட்­டி­ருந்­தது.

வட்­டுக்­கோட்­டையில் தனி­நாட்­டுக்­கான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஒத்­து­ழை­யாமை இயக்கம் உட்­பட பல­த­ரப்­பட்ட வழி­களில் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நெருக்­கடி கொடுத்த தமிழ் மக்­களின் சாத்­வீகப் போராட்­டத்தை நசுக்­கு­வ­தற்­காக பல்­வேறு வடி­வங்­களில் அரச பயங்­க­ர­வாதம் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. அவற்றில் யாழ் நூலக எரிப்பும், 1983 கறுப்பு ஜூலை கல­வ­ரமும் மிக மிக முக்­கிய சம்­ப­வங்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன.

கல்வி, விளை­யாட்டு, வர்த்­தகம், அரச நிரு­வாகம், பொதுத் துறை செயற்­பா­டுகள் என பல வழி­க­ளிலும் கொடி­கட்டிப் பறந்த தமி­ழரை பெட்­டிப்­பாம்­பாக அடக்கி ஆள முற்­பட்­டதன் உச்­ச­கட்ட வெளிப்­பா­டா­கவே கறுப்பு ஜூலை கல­வரம் நோக்­கப்­ப­டு­கின்­றது. அத்­த­கைய கல­வ­ரத்­திற்குக் கார­ண­மா­ன­வர்களை விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றி­வ­தற்கு அர­சாங்கம் முனை­ய­வில்லை.அதற்­கான முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. சன்­சோனி கமிஷன் என்ற பெயரில் ஒரு விசா­ரணை நடை­பெற்ற போதிலும் அது­வொரு கண்­து­டைப்பு விசா­ர­ணை­யா­கவே நடந்­தே­றி­யது.

முப்­பத்திமூன்று வரு­டங்கள் கடந்­துவிட்ட போதிலும், கறுப்பு ஜூலை கல­வ­ரத்­திற்குக் கார­ண­மா­ன­வர்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டா­தது போலவே, அந்தக் கல­வ­ரத்தில் ஈடு­பட்­ட­வர்கள் எவரும் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதிச் செயற்­பாட்டு கட்­ட­மைப்­பினால் இது­வ­ரையில் சட்டத்தின் முன்னால் நிறுத்­தப்­ப­ட­வில்லை; தண்­டிக்­க­ப்ப­ட­வு­மில்லை.

உள்­ளக விசா­ர­ணைகள் எந்தப் பல­னையும் தரப்­போ­வ­தில்லை என்று இப்­போது தமிழ் மக்­களும் அவர்­களைச் சார்ந்த புத்­தி­ஜீ­வி­களும் கூறு­வ­தற்கு கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் கொடு­மை­க­ளுக்கு நீதி கிடைக்­காத அனு­ப­வமும் ஒரு முக்­கிய கார­ண­மாகும்.

கறுப்பு ஜூலை கல­வ­ரத்தின் கொடு­மைகள் தமிழ் மக்­களின் மனங்­களில் இன்னும் ஆறாத வடு­வாகப் படிந்­துள்­ளது போலவே, மனி­தா­பி­மா­ன­முள்ள சிங்­கள மக்கள் மனங்­க­ளிலும் இந்த வடு ஆறாத வடு­வாக அமைந்­தி­ருக்­கின்­றன.
கறை படிந்த கறுப்பு ஜூலை.. (33 வருடங்கள் ஆகியும் ஆறாத வடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்) கறை படிந்த கறுப்பு ஜூலை.. (33 வருடங்கள் ஆகியும் ஆறாத வடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்) Reviewed by Madawala News on 7/23/2016 10:34:00 AM Rating: 5