சாப்­பி­டாமல் எங்கே போகிறாய் என்று கேட்டேன்.மாலை 3.30 மணிக்கு வருவேன் எனக்­கூறி சென்றவன்தான்...



சாப்­பி­டாமல் எங்கே போகிறாய் என்று கேட்டேன். நான் மாலை 3.30 மணிக்கு வருவேன் அம்மா எனக்­கூறிச் சென்றான். பின்னர் மகன் சென்று 20 நிமி­டங்களில் எங்­க­ளது தேவா­லய பாஸ்டர் தொலை­பேசி மூலம் கிசோன் கல்­ல­டிப்­பா­லத்திலிருந்து குதித்­து­விட்டான் என்றார்.

இவ்­வாறு மட்­டக்­க­ளப்பு– கூழா­வ­டியைச் சேர்ந்த சீ.கிசோர் (வயது 19) என்­ப­வரின் மரண விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளித்த அவரின் தாயா­ரான திரு­மதி சீ.வசந்தா கூறினார்.

 இவரின் மரண விசா­ரணை மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் நடை­பெற்­றது. காத்­தான்­குடி வடக்கு திடீர் மரண விசா­ரணை அதி­காரி ச.கணே­சதாஸ் நடத்­திய இவ்­வி­சா­ர­ணையில் சாட்சி மேலும் கூறி­ய­தா­வது,

எனக்கு மூன்று மகன்மார் உள்­ளனர். மர­ண­மா­னவர் மூத்த மகன். இரண்­டா­வது மகன் க.பொ.த.சாதா­ரண தரப்­ப­ரீட்சை எழுதி விட்டு தொழிற்­ப­யிற்­சிக்கு செல்­கிறார்.

கடைசி மக­னுக்கு நான்கு வயது நேச­றிக்கு செல்­கின்றார். கணவர் கட்டார் நாட்டில் தொழில் புரி­கின்றார். இறந்த மகன் பெக்கோ வாக­னத்தின் சார­தி­யாக தொழில்­பு­ரி­கின்றார்.

அவ­ருக்கு அடிக்­கடி கோபம் வரும். அவ­னது தம்­பி­யுடன் சிறு சிறு சண்டை போடுவான். பின்னர் இரு­வரும் சமா­தா­ன­மா­கி­வி­டு­வார்கள். மற்றும் படி எந்­தப்­பி­ரச்­சி­னை­களும் இல்லை.

சம்­பவ தினம் காலையில் 6.00 மணிக்கு நாங்கள் தேவா­ல­யத்­துக்குச் சென்றோம். 10.00 மணிக்கு நானும் கடைசி இரண்டு மகன்­களும் வீடு திரும்­பி­விட்டோம். ஆனால் மர­ண­மான மூத்த மகன் மட்டும் வீடு திரும்­பாமல் பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் வந்தார்.

 இவ்­வ­ளவு நேரமும் எங்கு போய் வந்தாய் எனக் கேட்டேன். ஒன்­றுமே பேச­வில்லை. நான் மக­னுக்கு ஏசினேன். பின்னர் நான் ஏசிய கோபத்தில் இரண்­டா­வது மகன் கிசோ­னுக்கு இரண்டு அடி அடித்­து­விட்டு சைக்­கிளை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முற்­பட்டான்.

 அப்­போது நான் சாப்­பி­டாமல் எங்கே போகப்­போ­கிறாய் எனக் கேட்டேன்.
பாஸ்­டரின் தொலை­பே­சியைக் கேட்டு என்ன செய்­வது என்று திண்­டா­டிய போது மகனை கல்­ல­டிப்­பா­லத்தில் தேடு­வ­தாகச் சொன்­னார்கள்.

நான் அவ்­விடம் செல்­ல­வில்லை. பின்னர் மறுநாள் அவரின் சடலம் அமிர்­த­க­ழியில் வாவியில் மிதப்­ப­தாக உற­வி­னர்கள் சொன்­னார்கள். எனது மகனின் சட­லத்­தையே என்னால் காண­மு­டிந்­தது. இவ்­வாறு அவர் தனது சாட்­சி­யத்தில் கூறினார்.

இறந்­த­வரின் தம்­பி­யான திசோன் (வயது 18) என்­ப­வரும் சாட்­சி­ய­ம­ளித்தார். பிரேத பரி­சோ­தனை செய்த சட்­ட­வைத்­தியர் எச்.எம்.ஏ.எஸ்.தர்மசேன நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி மரணம் ஏற்பட்டதாக அறிக்கை சமர்ப்பித்தார்.

சாப்­பி­டாமல் எங்கே போகிறாய் என்று கேட்டேன்.மாலை 3.30 மணிக்கு வருவேன் எனக்­கூறி சென்றவன்தான்... சாப்­பி­டாமல் எங்கே போகிறாய் என்று கேட்டேன்.மாலை 3.30 மணிக்கு வருவேன் எனக்­கூறி சென்றவன்தான்... Reviewed by Madawala News on 7/14/2016 10:50:00 AM Rating: 5