Free Space

தப்பிச் சென்ற 3 சிறு­மிகள் ஒப்படைப்பு... சிறுமிகள் கூறும் சோகக்கதை.



முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மது­ரங்­கு­ளியில் அமைந்­துள்ள சிறுவர் இல்லம் ஒன்­றி­லி­ருந்து தப்பிச் சென்று கொண்­டி­ருந்த மூன்று சிறு­மிகள்  பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்டு அவர்­க­ளது வேண்­டு­கோளின் பிர­காரம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதன் பின்னர் புத்­தளம் மேல­திக நீதிவான் டீ. சி. எச். பெரேரா முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்­களை சிலாபம், கட்­டு­பொத்த சிறுவர் இல்­லங்­களில்  ஒப்­ப­டைக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு பிர­தே­சங்­க­ளையும் சேர்ந்த மூன்று சிறு­மி­களே இவ்­வாறு சிறுவர் இல்­லத்­தி­லி­ருந்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை தப்பிச் சென்­ற­வர்­க­ளாவர்.

குறித்த சிறுவர் இல்­லத்தில் தாம் தொடர்ச்­சி­யாக பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­வதால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடி­யாத நிலை­யி­லேயே அங்­கி­ருந்து தப்பி வந்­த­தாக அச்­சி­று­மிகள் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர். இச்­சி­று­மிகள் மூவரும் புகை­யி­ரத வீதியில் சென்று கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்த பிர­தேச மக்கள் அவர்­களைப் பிடித்து விசா­ரித்த போது தம்மை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு அவர்கள் கேட்­டுள்­ளனர். பின்னர் பிர­தேச மக்கள் அச்­சி­று­மி­களை முச்­சக்­கர வண்­டி­யொன்றில் ஏற்றிக் கொண்டு வந்து மது­ரங்­குளி நகரில் அமைந்­துள்ள போக்­கு­வ­ரத்து பொலிஸ் காவ­ல­ரணில் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இவ்­வாறு வந்த ஒரு சிறுமி கருத்து தெரி­வித்த போது, தனது தாய் சுனா­மியில் உயி­ரி­ழந்­த­தா­கவும், தந்தை வேறு பெண்ணை மறு­மணம் செய்து கொண்­டுள்­ளதால் தான் இரண்டு வய­தி­லி­ருந்தே சிறுவர் இல்­லங்­களில் வாழ்­வ­தா­கவும், இந்த இல்­லத்தில் தாம் பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­வ­தா­கவும், தன்னை அங்­குள்­ள­வர்கள் அடித்து துன்­பு­றுத்­து­வ­தா­கவும் இவை­களைத் தாங்கிக் கொள்ள முடி­யா­ம­லேயே அங்­கி­ருந்து ஏனைய நண்­பி­க­ளுடன் தப்­பி­வந்ததா­கவும் தெரி­வித்தார்.
தப்பிச் சென்ற 3 சிறு­மிகள் ஒப்படைப்பு... சிறுமிகள் கூறும் சோகக்கதை. தப்பிச் சென்ற  3 சிறு­மிகள் ஒப்படைப்பு... சிறுமிகள் கூறும் சோகக்கதை. Reviewed by Madawala News on 7/12/2016 12:05:00 PM Rating: 5