Accaddemy

கண்டியில் காதலியுடன் சிக்கிய 3 கொலை குற்றவாளி.



ஹிக்கடுவையில் மூன்று கொலைகளுடன் சம்பந்தப்பட்ட 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கண்டி, பல்லேகலயில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மற்றும் 2 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைகளுடனும் குறித்த நபருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்படும் போது அவருடைய காதலியும் உடனிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் "கொம்பு ரொஷான்" என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சமிந்த என்ற நபர் கைது செய்யப்பட்டதையடுத்து இவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

சமிந்தவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சுரேஷ் குமார என்ற 23 வயதுடைய குறித்த சந்தேக நபரை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மீடியகொட பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

கண்டியில் காதலியுடன் சிக்கிய 3 கொலை குற்றவாளி. கண்டியில் காதலியுடன் சிக்கிய 3 கொலை குற்றவாளி. Reviewed by Madawala News on 7/14/2016 01:06:00 PM Rating: 5