Accaddemy

இரு மகன்­மார்கள் இணைந்து தாக்கி 44 வய­து தந்தையை கொன்றனர்.. இலங்கையில்.



குடும்ப தக­ராறு கார­ண­மாக இரு மகன்­மார்கள் இணைந்து தமது தந்­தையை கடு­மை­யாக தாக்­கி­ய­மையினால் தந்தை உயி­ரி­ழந்­துள்ளார். இந்த சம்­பவம் அநு­ரா­த­புரம் கெப்பட்டி கொல்­லாவ பிர­தே­சத்தில் நடந்­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதன்­படி இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­புடைய மகன்மார் இரு­வ­ரையும் தேடி பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இந்த சம்­ப­வத்தின் கார­ண­மாக உயி­ரி­ழந்த 44 வய­து­டைய நபர் பத­விய பொலிஸ் அதி­கா­ரி­யென தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த சம்­பவம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்பெற்றுள்ளது. இருந்­த­போ­திலும் அன்­றைய தினம் விபத்தில் சிக்­கி­யதன் கார­ண­மாக தனக்கு காயம் ஏற்­பட்­ட­தாக கூறி பத­விய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­றுள்ளார். ஆனாலும் நிலைமை மோச­மா­னதை அடுத்து அநு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­றுள்ளார். இச் சந்­த ர்ப்­பத்தில் நேற்று அந்­நபர் உயி­ரி­ழந்­துள் ளார்.

இதன்­பின்னர் மேற்­கொள்ளப்பட்ட பிரேத பரி­சோ­த­னையில் இவ­ரது தலைப்­ப­கு­தியில் கடு­மை­யாக தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­மையின் கார­ண­மா­கவே குறித்த நபர் உயி­ரி­ழந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இதற்கமைய இந்த சம்பவத்துடன் தொடர் புடைய மகன்மார் இருவரையும் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
இரு மகன்­மார்கள் இணைந்து தாக்கி 44 வய­து தந்தையை கொன்றனர்.. இலங்கையில். இரு மகன்­மார்கள் இணைந்து தாக்கி 44 வய­து தந்தையை கொன்றனர்.. இலங்கையில். Reviewed by Madawala News on 7/25/2016 11:07:00 AM Rating: 5