Free Space

4 ஸ்ரீலங்கன் பயணிகள் விமானங்களை குத்தகைக்கு எடுக்கிறது பாகிஸ்தான்.



இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு சொந்தமான 4 பயணிகள் விமானங்களை குத்தகைக்குபெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெறுவதை பாக்கிஸ்தானின் தேசிய விமானநிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.

ஏற்கனவே இந்த செய்தி இலங்கை தரப்பால் மாத்திரம் கூறப்பட்ட செய்தியாக வெளியாகியிருந்தது.

இந்தநிலையில், குத்தகையின் அடிப்படையில் கொழும்பு – லண்டன் ஆகிய இடங்களுக்கு இடையில் சேவைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி முதல் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பாகிஸ்தான் எயாரை கோடிட்டு எக்ஸ்பிரஸ் ட்பியூன் தெரிவித்துள்ளது.

குறித்த விமானங்கள், விமானிகள் மற்றும் சேவைகளுடனேயே குத்தகைக்கு பெறப்படவுள்ளதாகவும்அந்த எயார்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமது நிறுவனம் இலங்கையிடம் இருந்து ஏ 330 ரக நான்கு விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளது என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் டான்யால் கிலானி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குத்தகைக்கு பெறப்படும் விமானங்களில் ஒரு விமானம் ஆகஸ்ட் மாதத்தில் பாக்கிஸ்தானுக்கு கொண்டு வரப்படும் என்றும் கிலானி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இரண்டு விமானங்களும் 2017 பெப்ரவரி மாதத்தில் பாக்கிஸ்தானுக்கு எடுத்துவரப்படும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
4 ஸ்ரீலங்கன் பயணிகள் விமானங்களை குத்தகைக்கு எடுக்கிறது பாகிஸ்தான். 4  ஸ்ரீலங்கன் பயணிகள் விமானங்களை குத்தகைக்கு எடுக்கிறது பாகிஸ்தான். Reviewed by Madawala News on 7/22/2016 11:26:00 AM Rating: 5