Free Space

இராணுவப் புரட்சி எதிரொலி.. துருக்கியில் எர்டோகனுக்கு விசுவாசமற்ற 50 ஆயிரம் பேர் பணி நீக்கம்.



துருக்கியானது கடந்த வாரம் அந்நாட்டில் இடம்பெற்ற தோல்வி கண்ட இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து 50,000 க்கு மேற் பட்டவர்களை அவர்களது பணிகளிலி ருந்து நீக்கம் செய்துள்ளது.

மேற்படி பணிநீக்கம் செய்யப்பட்ட வர்களில் இராணுவத்தினர், நீதித்துறையி னர் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர் கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உள்ளடங் குகின்றனர்.

அந்நாட்டு ஜனாதிபதி தாயிப் எர்டோகனுக்கு விசுவாசமற்றவர்களை இலக்கு வைத்து பரந்தளவிலான நட வடிக்கை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப் பட்டதையடுத்தே இந்தப் பணிநீக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

நாடு கடந்த நிலையில் அமெ ரிக்காவில் வாழும் மதகுரு வான பெதுல்லாஹ் குலெனே இந்த இராணுவ சதிப் புரட்சிக் குக் காரணம் என துருக்கிய அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

அந்த மதகுரு தீவிரவாத அமைப்பொன் றைச் செயற்படுத்தி வருவதாக துருக்கிய பிரதமர் பினாலி யில்ட்றிம் குறிப்பிட்டுள் ளார்.

நாங்கள் அவருடன் தொடர்புபட்ட அனைத்தையும் வேரோடு களைவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவப் புரட்சி எதிரொலி.. துருக்கியில் எர்டோகனுக்கு விசுவாசமற்ற 50 ஆயிரம் பேர் பணி நீக்கம். இராணுவப் புரட்சி எதிரொலி.. துருக்கியில் எர்டோகனுக்கு விசுவாசமற்ற 50 ஆயிரம் பேர் பணி நீக்கம். Reviewed by Madawala News on 7/21/2016 11:18:00 AM Rating: 5