Accaddemy

வீரவன்சவின் அமைச்சு கூட்டுத்தாபனத்தில் 55 வாகனங்களை பாவனை செய்துள்ள சத்தாதிஸ்ஸ தேரர்...


முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் நிர்வாகக் குழு உறுப்பினர் என்ற போர்வையில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 55 வாகனங்களை பயன்படுத்தியமையினால் 690 லட்சத்திற்கும் அதிகமான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ராவணா பலய அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரரிடம் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கடந்த 2010 ஆம் அண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அடிக்கடி பல்வேறு தேவைகளின் நிமித்தம் அரச நிறுவனத்தின் வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பயன்படுத்தும் போது அதற்காக வாடகை, எரிபொருள், சாரதி சம்பளம் என்பவற்றை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திடமிருந்து செலுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேரரது நிதி மோசடி தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிலையில் ,

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின்  செயற்குழு உறுப்பினராக சத்தாதிஸ்ஸ தேரர்  இருந்துள்ளதாகவும் இவருக்கு இந்த வாகனங்களை வழங்கியுள்ளதாகவும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பதிவுகளில் காணப்படுவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

வீரவன்சவின் அமைச்சு கூட்டுத்தாபனத்தில் 55 வாகனங்களை பாவனை செய்துள்ள சத்தாதிஸ்ஸ தேரர்... வீரவன்சவின் அமைச்சு கூட்டுத்தாபனத்தில்  55 வாகனங்களை பாவனை செய்துள்ள சத்தாதிஸ்ஸ தேரர்... Reviewed by Madawala News on 7/13/2016 07:33:00 PM Rating: 5