Free Space

நேற்று 5 பிள்ளைகளின் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்னுக்கு நீதிமன்ற தீர்ப்பு.



தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் (ஐந்து பிள்ளைகளின் தாய்)  ஒருவரை  கொடுக்கல் வாங்கல் பிரச்சினையின் போது கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க பெண்ணை இன்று (15) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து இம் மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.

இச்சம்பவம் நேற்று (14) மாலை இடம் பெற்றுள்ளது

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கொலை செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு 2 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளா ர்இதனை மீளக் கொடுப்பதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கைககலப்பில் முடிவுற்று கடன் கொடுத்த பெண்ணை கடன் வாங்கிய பெண் கத்தியால் குத்தியதாகவும் இதன் போது படுகாயமடைந்த பெண் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிர் இழந்ததாக  பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சதேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலையே மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று 5 பிள்ளைகளின் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்னுக்கு நீதிமன்ற தீர்ப்பு. நேற்று  5 பிள்ளைகளின் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்னுக்கு நீதிமன்ற தீர்ப்பு. Reviewed by Madawala News on 7/15/2016 10:38:00 PM Rating: 5