சிகரட் விலை 60 ரூபா வரை அதிகரிக்கும் அமைச்சரவைப் பத்திரம் இறுதிக்கட்டத்தை அடைந்தது.




சிகரெட்டுக்கு அறவிடப்படும் வரியை 90 வீதமாக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமெரிக்காவில் வைத்து தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக கவுன்ஸில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்துவற்காக புகையிலைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது  அமைச்சரவை அங்கீகாரம் பெறும் பட்சத்தில் தற்போது 30, 35 சூபாவாக உள்ள சிகரட்  55 - 60ரூபா வரை  அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது..
சிகரட் விலை 60 ரூபா வரை அதிகரிக்கும் அமைச்சரவைப் பத்திரம் இறுதிக்கட்டத்தை அடைந்தது. சிகரட் விலை 60 ரூபா வரை  அதிகரிக்கும் அமைச்சரவைப் பத்திரம் இறுதிக்கட்டத்தை அடைந்தது. Reviewed by Madawala News on 7/20/2016 10:41:00 PM Rating: 5