Madawala News

நல்லாட்சி மீதான எனது முறையிடல்...


சிறுபான்மை முஸ்லீம்களின் பெரும்பான்மை ஆதரவற்ற நிலையில் இரு முறை இலங்கை ஜனாதிபதி யான மகிந்த ராஜபக்ச அரசு தனது இறுதி காலத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான சக்திகளுக்கு அடைக்கலம் வழங்கியதாக முஸ்லீம் களது  முழுமையான ஆதரவுத் தளத்துடன் மகிந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டு இன்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், நல்லாட்சி அரசை நோக்கி நாம் இவ்வாறு வினா எழுப்பினால் முடிவு என்னவாகும். 

நல்லாட்சி உருவாக காரணமாக முஸ்லீகளினூடே எழுந்த பிரச்சினைகள் 

1 தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் கடந்த அரசு வேறு இடம் ஒதுக்கி தருவதாக கூறிய போது கிளர்ந்தெழுந்த எமது சமுக தலைமைகள் இன்று அவ்வாறான வேறு இடம் வழங்கப்பட்ட பின் மெளனமாக இருப்பதாக இருக்கிறது 
அப்போது ஏன் மகிந்த அரசு மாற்று இடம் தருகிறோம் எனும் போது கிளர்ந்தெழுந்தோம்?
இந்த அரசிலும் அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க நாம் தயங்கியமை நாம் ஏகோபித்து உருவாக்கி அரசு என்பதா?

2. பேருவளை அழுத்கம சம்பவங்களுக்கு பெறுப்பான ஞானசார தேரர் தொடர்பான இந்த அரசின் நிலைப்பாட்டை நாம் நல்லாட்சியிடம் வினவியிருக்கிறோமா?

3.மகியங்கனை சம்பவம் 
  பொரல்லை பள்ளிவாசல் கண்ணாடி உடைப்பு விவகாரத்தில் கைது செய்யபட்டவர்களும் சமரசம் செய்கிற அளவுக்கு தான் எமது ஆளுமைகளுக்கும் அரசியல் தலைவர்களால் அஜன்டா வழங்கப்பட்டிருக்கிறது

ஆங்காஙகே பள்ளிவாசல் தாக்கப்பட்படிருக்கிறது அண்மையில் ஹபுகஸ்தலாவ பாத்திய மாவத்தை பள்ளி போன்றவைகான எமது நியாயம் 

பாத்தியா மாவத்த பள்ளிவாசல் அனுமதி தற்போது நகர அபிவிருத்தியால்
ரத்து செய்யப்பட்டது தொடர்பில் நல்லாட்சியின் விடை என்ன? 
இன்னும் 

தயா கமகே யை வைத்துக் கொண்டு கரும்பு பயிர் செய்கை தொடர்பான விவசாயிகளின் பிரச்சனைக்கு நல்லாட்சியில் எமக்கு சாதகமான பதிலை அடைய முடியுமா என்பதையும்

ஹெல உறுமய கூறுகின்ற மாதிரி நுரைச்சோலை சுனாமி வீட்டு திட்டத்தை எல்லோரைக்கும் பகிர்ந்தளிப்பது தீர்வன்றால் அது எப்போதே செய்திருக்கமுடியும்
நுரைச்சோலை சுனாமி வீட்டுக்கு ஹெலஉறுமய வைத்துக் கொண்டு எமது வீடுகளை நாம் பெற்றுக் கொள்ளமுடியும்?

வட்டமடு காணிகள் தொடர்பில் எமது விவசாயிகளின் நிலை தொடர்பில் நல்லாட்சியில் இது வரை எந்தவொரு முன்னேற்றமான செயற்பாட்டையும் நாம் காண முடிவதில்லை

வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை பிரித்திருக்கிற சூழலில் மீண்டும் இணைப்பதை தடுப்பதற்கும் முஸ்லீம்களுகான தீர்வு விடயங்களிலும் நல்லாட்சி அரசின் நிலைப்பாடும் தெளிவு படுத்தப்பட வேண்டும் 

கரையோர மாவட்டம் என்கின்ற விடயத்தை ஒரு கோசமாக முன்மொழிகின்ற தலைமைகள் அதனுடைய உள்ளடக்கங்கள் தொடர்பில் வைத்திருகின்ற அம்சங்கள் என்ன?


உதாரணமாக வெறுமனே கரையோர மாவட்டம் என்பது எமது பிரதேச செயலக பிரிவுகளை மாத்திரம் உள்ளடக்கியதல்ல மாறாக முஸ்லீம்களின் அதிகமான காணிகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட வேண்டும் 

முஸ்லீம்களின் நிலை இன்று எவ்வாறு உள்ளதென்றால் தேயிலை அறுவடை செய்பவன் நெல் வேளாண்மை பற்றி பேசுவதும் 90களின்  சொப்பின் பேக்குடன் வந்தர்கள் அகதியாக நிற்க சுனாமி வீட்டை பற்றி அதை மறந்து பேசுவதும்  அரச அச்சுக்கு போன சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றை கூட்டாக இருந்து சதி செய்து விட்டு இன்று பிரிந்து நின்று படம் காட்டுகின்ற அதை நாம் பார்க்கின்ற நல்லாட்சியிலா இருக்கிறோம்.