இன்று 80 பேர் கொல்லப்பட்ட பிரான்ஸ் தாக்குதலில் குற்றவாளியாக முஹம்மத் லஹ்வீஸ் பெயர் அறிவிப்பு.



பிரான்ஸின் நைஸ் நகரில் தீவிரவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் லொரியின் சாரதியை பிரான்ஸ் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த நபர் 31 வயதான  துனீஷியாவை பிறப்பிடமாகக்கொண்ட முஹம்மத் லஹ்வீஸ் புஹ்லெல் எனப்படும் பிரான்ஸ் பிரஜையென தெரியவந்துள்ளது.

இவர் சிறு குற்றங்களை புரிந்துவந்த, பொலிஸாருக்கு பரிட்சையமான ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரான்ஸின் தீவிரவாத எண்ணம் கொண்ட நபர்களின் பட்டியில் இவர் உள்ளடக்கப்பட்டிருக்கில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் பெயரளவில் முஸ்லிமாக இருந்தாலும் மது அருந்துதல், மனைவியை துன்புறுத்துதல், பன்றி இறைச்சியை சாப்பிடுபவர் என இங்கிலாந்தின் சண் பத்திரிகை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் தனியாக லொரியை செலுத்தினாரா? அல்லது இவருடன் வேறு யாரும் இருந்தார்களா? என்பது தெளிவாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நைஸ் நகரில் அவரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 80 பேர்  இந்த  தாக்குதலில் கொல்லபட்டனர்.
Mohamed Lahouaiej Bouhlel ID card, Nice Bastille Day
Mohamed Lahouaiej Bouhlel Nice terror attack, ISIS


இன்று 80 பேர் கொல்லப்பட்ட பிரான்ஸ் தாக்குதலில் குற்றவாளியாக முஹம்மத் லஹ்வீஸ் பெயர் அறிவிப்பு. இன்று 80 பேர் கொல்லப்பட்ட பிரான்ஸ் தாக்குதலில் குற்றவாளியாக முஹம்மத் லஹ்வீஸ் பெயர் அறிவிப்பு. Reviewed by Madawala News on 7/15/2016 10:58:00 PM Rating: 5