Accaddemy

சுற்றுலா சென்ற 8 பேர் விபத்தில் உடல் நசுங்கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த சோகம்.



இந்தியா:

கர்நாடகா கலபுரகி அருகே மணல் லொறியும், காரும் நேருக்கு நேர் மோதிய­மையால் ஏற்­பட்ட விபத்தில் கர்நாடகத்துக்கு ஆன்­மீக சுற்றுலா சென்ற மராட்டியத்தைச் சேர்ந்த 8 பேர் உடல் நசுங்கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தனர் .


கர்நாடகத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள், கோயில்கள் உள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள தத்தாத்ரேயா கோயிலில் சாமி கும்பிட மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் காரில் வந்தபோது விபத்தில் சிக்கி உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மராட்டிய மாநிலம் ஒஸ்யானாபாத் மாவட்டம் பஞ்ச்மகால் பகுதியை சேர்ந்தவர்கள் காரில் ஆன்மீக சுற்றுலாவாக கர்நாடகம் சென்­றுள்­ளனர். இவர்கள் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா கனகபுராவில் உள்ள தத்தாத்ரேயா கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருந்தனர்.

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா டோங்கிலால் கிராமத்தின் அருகே நேற்றுமுன்­தினம் மதியம் வந்து கொண்டிருந்தபோது காரும், எதிரே வந்த மணல் லொறியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில், காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

காரில் இருந்தவர்கள் இடிபாடு களுக்குள் சிக்கி உயி­ரி­ழந்­த­னர். விபத்து நடந்ததும் லொறியை அங்கேயே விட்டு விட்டு அதன் சாரதி தப்பி ஓடியுள்­ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் நாரோனா பொலி­ஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 4 பெண்கள், 2 ஆண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயி­ரிழந்­த­தோடு மேலும், 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

அவர்களை மீட்ட பொலிஸார் கலபுரகி அரசு மருத்­து­வ­ம­னைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்­து­வர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆயினும் அவர்­களின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சுற்றுலா சென்ற 8 பேர் விபத்தில் உடல் நசுங்கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த சோகம். சுற்றுலா சென்ற 8 பேர் விபத்தில் உடல் நசுங்கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த சோகம். Reviewed by Madawala News on 7/21/2016 11:34:00 AM Rating: 5