Accaddemy

அரசாங்கம், பொது மக்களுக்கு நஞ்சை கொடுத்து சாகடித்து விட்டு அனல்மின் நிலையம் அமைக்கிறது. a



-  எப்.முபாரக் -

பொது மக்களுக்கு நஞ்சை கொடுத்து சாகடித்து விட்டு சம்பூரில்  அனல்மின் நிலையத்தினை அமைப்பது போன்று தான் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.    

 கிழக்கு மாகாண சபையின் 61ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) கிழக்கு மாகாண சபையின் அவைக் கேட்போர் கூடத்தில் சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது திருகோணமலை சம்பூரில் அமையப்பெறவிருக்கும் அனல் மின் நிலையத்தினை தடைசெய்யக் கோரி தனி நபர் பிரேரனையை முன் வைத்து உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.                  

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பல வர்த்தக ரீதியிலான தொடர்புகளை பேணி வந்தாலும் ஒரு மாவட்டத்தின் பாதிப்புகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கடந்த 2013-08-24ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தமும்,அதேபோன்று 2014-09-06ஆம் திகதி ஒரு ஒப்பந்தமும் செய்து நாட்டின் சில பகுதிகளை குழிபரிக்கும் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டியுள்ளதை அறியமுடிகின்றது.                        

திருகோணமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமையும்மிடத்து பல சூழல் ரீதியான பாதிப்புகளை எதிர் நோக்க ஏற்படும். அப்பிரதேச மக்களை சூழல் தாக்கங்களை கொண்டு அழிக்கும் செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் ஒரு போதும் மேற்கொள்ள கூடாது.                      

திருகோணமலை மாவட்டத்தில்மூவீன மக்களும் நிம்மதியாக அமைதியான முறையில் வாழ்கின்ற நிலையில் இம்மாவட்டத்தில் இன்னுமொரு இனக் பாகுபாட்டினை இந்த அனல் மின் நிலையத்தினை அமைப்பதன் மூலம் நல்லாட்சி அரசு மேற்கொள்ளக் கூடாது,எப்படியாவது அனல் மின் ஒப்பந்தத்தினை இடை நிறுத்தி வேறு பிரதேசங்களில் அமைத்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டிலே திருகோணமலை சம்பூர்,மூதூர் மக்கள் இருக்கின்றார்கள் எப்படியாவது கூடிய விரைவில் மக்களுக்கான முடிவொன்றினை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அரசாங்கம், பொது மக்களுக்கு நஞ்சை கொடுத்து சாகடித்து விட்டு அனல்மின் நிலையம் அமைக்கிறது. a அரசாங்கம், பொது மக்களுக்கு நஞ்சை கொடுத்து சாகடித்து விட்டு அனல்மின் நிலையம் அமைக்கிறது. a Reviewed by Madawala News on 7/22/2016 11:11:00 AM Rating: 5