ACJU தலமையகத்தில் அதி விமர்சையாக நடைபெற்ற பாராட்டும் நன்றிக் கடனும்

 
கடந்த 2016-05-16ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டிய முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கும், மஸ்ஜித் சம்மேளனங்களுக்கும், பரோபகாரிகளுக்கும் பாராட்டு வைபம் இன்று 2016-07-16 சனிக்கிழமை மாலை 04.00 மணிமுதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அதனது கௌரவ தலைவர் எம்.ஜ.எம். முப்தி ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதிலே பின்வரும் அமைப்புகள் கலந்து கொண்டு பாராட்டுகளையும் நினைவுச் சின்னங்களையும் பெற்றுக் கொண்டன.


Jama’athus Salamah - Sri Lanka  

CDMF - Colombo District Masjids Federation (12)

SLJI - Sri Lanka Jamaat e-Islami

National Council YMMA – Maligawatta

All Ceylon YMMA Conference – Dematagoda

ARC – Advocacy and Reconciliation Council

Jabalur Rahma - Mountain of Mercy

Kandy City Federation

Kandy City Branch – ACJU

Kandy Muslim Traders Association

Mawanella Janaza Welfare Association

Kalkuda Branch - ACJU & Masjidus Shoora – Kalkuda

Jamiul Khairath - Madawala Bazar

Kolonnawa Jumma Masjid

Kolonnawa Branch – ACJU


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்கள் பொதுப்பணிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பைத்துஸ்ஸகாத் வழிகாட்டல்களையும் அனைத்து மஸ்ஜித்களும் நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆர்வ மூட்டினார்கள்.


சமூக சேவை ஒரு இஸ்லாமிய கடமை என்ற தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரும் , ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்; பணிப்பாளருமான அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஜம்இய்யாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்  அவர்கள்  மூலம் வெள்ள அனர்த்தத்தில் ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுகள் தொடர்பான பூரண தெளிவொன்றை சபையோருக்கு வழங்கினார்கள்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட சகலரும் ஜம்இய்யாவின் முயற்சியைப் பாராட்டியதோடு தங்களது கருத்துக்களையும் முன்வைத்தார்கள். 

சமூகத்திற்குத் தலைமை தாங்கும் தகைமையும் பொறுப்பும் ஜம்இய்யாவிற்கே உள்ளது, சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நாம் ஜம்இய்யாவின் வழிகாட்டல்களையே எதிர்;பார்த்திருக்கின்றோம். 

ஜம்இய்யா இன்றுபோல் என்றும் தனது சேவையைத் தொடரவேண்டும் என சபையோர் ஏக மனதாக  வேண்டிக் கொண்டனர்.

இறுதியாக ஜம்இய்யாவின் கௌரவ பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். கூட்டம் இனிதே கப்பாறதுல் மஜ்லிஸுடன் நிறைவுற்றது.
ACJU தலமையகத்தில் அதி விமர்சையாக நடைபெற்ற பாராட்டும் நன்றிக் கடனும் ACJU தலமையகத்தில் அதி விமர்சையாக நடைபெற்ற பாராட்டும் நன்றிக் கடனும் Reviewed by Madawala News on 7/17/2016 12:15:00 AM Rating: 5