Ad Space Available here

"ஆரிப் சம்சுதீனின் நேர்த்தி அரசியலும், அதாவுல்லாஹ்வின் சிறு பிள்ளைத்தனமும்" as- ஆதம்பாவா  வாக்கிர்  ஹுசைன்-

மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் பதவி நீக்கம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இவ்விடயம் குறித்து முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்களும், அவரை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களும் தமது மகிழ்ச்சி, காழ்ப்புனர்ச்சி மற்றும் கொண்டாட்டங்களை கண்டு நானொன்றும் ஆச்சரியம் அடையவில்லை, ஏன் எனில், அதாவுல்லாஹ் இழந்தது சாதாரண ஒரு நிலையில் இருந்த ஒரு அரசியவாதியை அல்ல.

மாறாக நீண்ட அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்து, அரசியல் குறித்து மிகத்தெளிவான தூரநோக்குடைய ஒரு துடிப்புமிக்க இளைஞனையே என்பதும், அவரை இழந்திருக்கவே கூடாது என்பதிலும் இருந்த ஏமாற்றத்தின் விளைவே இக்கொண்டாட்டங்கள் என்றால் அது மிகையாகாது.


அது மட்டுமல்ல, ஆரிப் சம்சுதீன் வெறுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளார், மாறாக அவரின் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்தல்ல, அவர் எதிர்வரும் 21 ஆம் திகதியை மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ள இருப்பது அதாவுல்லாஹ் ஆதரவாளர்களுக்கு தெரியவில்லை போலும்
உண்மையில், ஆரிப் சம்சுதீனின் அரசியல் சமகாலத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் ஏட்படுத்தி இருந்ததை,அவர் தற்போது சார்ந்துள்ள கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பதவியினை கொண்டு அலங்கரிப்பதன் மூலம் கண்டுகொள்ள முடியும்.

தற்கால அரசியலில் சுயநலமும், தனிநபர் கொள்கைகளும் மலிந்துள்ள நிலையில், தனது பதவியைக்குறித்து எந்தவொரு சலனமும் இல்லாமலும், அது குறித்து எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமலும், இலங்கையில் மஹிந்த சர்வாதிகாரம் புரையோடிப்போய் இருந்த நிலையில், மஹிந்தவின் செல்லப்பிள்ளையாகவும், ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் மஹிந்தவை வெறுத்தொதுக்கிய நிலையில் நன்றிக்கடன் என்ற நாமத்தில் நன்றிகெட்டு ஆதரவளித்த அதாவுல்லாஹ்வை விட்டு, நாட்டில் நல்லாட்சிக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம், தனது தனிப்பட்ட பதவி நிலையை விட, சமூகத்தின் எதிர்பார்ப்பே பெரிதென்று இருக்கும் ஆரிப் சம்சுதீனுக்கு, தற்போதைய பதவிப்பறிப்பு என்பது அவரின் நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு எந்தவொரு அதிர்வையும் ஏற்படுத்தி விடாது .

கட்சிக்கும், அதன் தலைவருக்கும் துரோகமிழைத்ததாக அதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்களால் பரப்பப்படும் அபாண்டங்களுக்கும் , அண்டப்புளுகுகளுக்கும் முன் அவர்கள் ஒன்றை சிந்திக்க தலைப்படவேண்டும். நீங்கள் கூறுவது போன்று ஆரிப் சம்சுதீன் துரோகமிழைத்தவர் என்றால், தனக்கு அரசியல் கற்றுக்கொடுத்து, அரசியல் அந்தஸ்த்து ஏட்படுத்தி , பாராளமன்ற வரை அனுப்பிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அதாவுல்லா ஏட்படுத்தியது பெரும் கீர்த்தியா அல்லது அவர் அக்கட்சிக்கு அணிவித்தது மலர் கிரீடமா ? ஒருவன் சமூகத்திட்காக தனது அரசியலில் கொள்கை மாற்றம் புரிவதட்கும், ஒருவன் தனது சுயநலத்திட்காக கொள்கையை மாற்றுவதட்கும் வித்தியாசம் புரியாத மக்கள் அல்ல நாம் .


ஆரிப் சம்சுதீன் போன்றவர்களின் அரசியல் என்பது வெறுமனே ஒரு கொள்கையற்ற தலைவனை கண்ணை மூடிக்கொண்டு வழிபடுவதல்ல , மாறாக சமூகம் சார்ந்து, சமூகத்தின் நாடியறிந்து அதன் தேவை அறிந்து பயணிப்பதாகும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக ஒரு முதல் அமைச்சரை பெற்றுக்கொள்ளுவதட்கு தடையாக இருந்த பேரினவாதிகளின் ஆதரவாளர்களை, அவர்களின் நோக்கங்களை எல்லாம் செல்லாக்காசாக்கி , ஒரு முஸ்லிம் முதல் அமைச்சரை பெற்றுக்கொள்வதில் ஆரிப் சம்சுடீனின் பங்கு அளப்பெரியது. அது மட்டுமல்லாமல், ஒரு சாதாரண மாகாண சபை உறுப்பினராக இருந்து கொண்டு அவர் செய்த மறைமுகமான சேவைகள் ஏராளம்.

இப்படிப்பட்ட துடிப்பான அரசியல் இளைஞர்களை எம் சமூகம் அடையாளம் காண வேண்டும். எமது எதிர்கால அரசியலை வழிநடத்தும் பங்குதாரர்களாக ஆரிப் சம்சுதீன் போன்றவர்கள் நிச்சயம் இருக்கப்போவதை குறுநில மன்னர்களும் அதன் ஆதரவாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் . வெறுமனே பதவியாசை பிடித்தலையும் இன்றைய காலத்தில் இதுபோன்ற பதவிகள் குறித்து அக்கறைப்படாத அரசியல்வாதியை சமூகமே தாமாக இனங்கண்டுகொள்ளும்.

- ஆதம்பாவா  வாக்கிர்  ஹுசைன்-

"ஆரிப் சம்சுதீனின் நேர்த்தி அரசியலும், அதாவுல்லாஹ்வின் சிறு பிள்ளைத்தனமும்" as "ஆரிப் சம்சுதீனின் நேர்த்தி அரசியலும், அதாவுல்லாஹ்வின் சிறு பிள்ளைத்தனமும்" as Reviewed by Madawala News on 7/19/2016 07:43:00 PM Rating: 5