Ad Space Available here

நாட்டில் இன நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­வ­தற்­காக நாங்கள் பல வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வருகின்றோம். az(எம்.ஆர்.எம்.வ­ஸீம்)

சமூ­கத்­துக்கு ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளை தட்­டிக்­கேட்­ப­தற்கு முது­கெ­லும்­பில்­லா­த­ அர­சி­யல்­வா­திகளே என்­மீது சேறு­பூ­சு­கின்­ற­னர்.

யார் விமர்­சனம் செய்­தாலும் சமூகத்­துக்கு ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து குரல் கொ­டுப்­பேன் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்­தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­படும் இயக்கம் நேற்று முன்­தினம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வா­று தெரி­வித்­தார்.

இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கை­யில்­,முஸ்லிம் மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தா­கவும் அவர்­க­ளுக்கு ஏற்­படும் பிரச்­சி­னை­களை தட்­டிக்­கேட்­ப­தா­கவும் தெரி­வித்து அவர்களை ஏமாற வாக்­கு­க­­ளைப்­பெற்று இன்று முஸ்லிம் அரசி­யல்வாதிகள் பாரா­ளுமன்­றத்­துக்கும் மாகா­ண­ச­பை­­க­ளுக்கும் சென்­றுள்­ள­னர்.

அத்­­துடன் தேர்தல் காலத்தில் முஸ்லிம்களி­ன் உரி­மைக்­காக போரா­டுவோம் என தெரி­விக்கும் இவர்கள் தேர்­தலில் வெற்­றி­பெற்று அதி­கா­ரத்­துக்கு வந்­தவுடன் தங்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­களை மறந்து விடு­கின்­றனர்.

அவர்­க­­ளுக்கு என்ன பிரச்­சினை இருக்­கி­ன்­றது என்­பது தொடர்­பிலும் மறந்து விடு­கின்­ற­னர்.

மேலும் நான் பிர­தி­நி­தித்­துவம் பெற்­றி­ருந்த மத்­திய மாகா­ண­ச­பையில் அதி­க­மான முஸ்லிம் பிர­தி­நி­தி­கள் இருக்­கின்­றனர். ஆனால் அவர்கள் ஒரு­போதும் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் மாகா­ண­சபை அமர்­வு­க­ளின்­போது வாய்­தி­றந்­த­தில்லை.

 அது மட்­டு­மன்றி தற்­போது முஸ்­லிம்­க­ளுக்­கு பிரச்­சி­னை­க­ளை ஏற்­ப­டுத்­தி­வரும் பொது­பல சேனா­வின்­ பெ­ய­ரைக்­கூட உச்­ச­ரிக்க அச்­சப்­ப­டு­கின்­ற­னர்.

ஆனால் நாட்டில் இன நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­வ­தற்­காக நாங்கள் பல வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வருகின்றோம். அதே­போன்று முஸ்லிம்களுக்கு ஏதேனும் பிரச்­சினை ஏற்­பட்டால் அதனை தட்­டிக்­கேட்­ப­தற்கும் பின் நிற்­க­வில்லை.

சட்­டத்தின் பிர­காரம் நட­வ­டிக்கையும் எடுக்­கின்றோம். அண்­மைக்­கா­ல­மாக பொது­பல சேனா முஸ்லிம் மக்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் கருத்­து தெரி­வித்­து வரு­கின்­றது. இதனை தடுக்­க­வேண்டும் என நாங்கள் அர­சாங்­கத்­திடம் தெரி­வித்­துள்ளோம். அதே­போன்று பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­துள்­ளோம்.

அதே­போன்று அர­சாங்கம் அவர்­க­­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காமல் இருக்­­கும்­போது அதற்­கெ­தி­ராக தைரி­ய­மாக குரல் கொடுக்­கின்றோம். ஏனெனில் நாங்­கள் யாருக்­கும் கட்­டு­ப்­பட்­ட­வர்கள் அல்ல. ஆனால் முஸ்லிம்களின் வாக்­கு­களால் மாகாண சபைக்கு சென்­ற­வர்கள் கட்சி தலை­மைக்கு பயந்து இன்று முஸ்­லிம்­களுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் பிரச்­சினை தொடர்­பில் கதைப்­ப­தற்கு தைரியம் இல்­லாமல் இருக்­கின்­றனர். அத்­துடன் முஸ்லிம்களுக்கு ஏற்­படும் பிரச்­சி­னை­­களை தட்­டிக்­கேட்கும் எங்­க­ளையும் விமர்­சிக்­கின்­றனர்.

அத்­துடன் நான் அர­சி­யலில் நிரா­க­ரிக்­கப்­பட்­டவன் என்றால் கொழும்­பைச்­சேர்ந்த நான் கடந்த மாகா­ண­சபை தேர்­தலில் மத்­திய மாகா­ணத்தில் கண்டி மாவட்­டத்­தில் அதி­கூ­டிய விருப்­பு­வாக்­கு­க­ளைப்­பெற்று பட்­டி­யலில் எவ்­வாறு முத­லாம் இடத்­துக்கு வந்தேன்? மக்கள் என்­மீது நம்­பிக்கை வைத்­துள்­ளனர்.

நாங்கள் வாக்­கு­றுதி அளித்தால் அதனை நிறை­வேற்­று­கின்றோம். ஆனால் என்னை அர­சி­யலில் நிரா­க­ரிக்­கப்­பட்­­டவர் என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்கள் தேர்­தலில் என் பின்­னால் இருந்­ததால் தான் அவர்­க­ளின் விருப்­பு­வாக்­கு­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டன என்பதை இவர்கள் மறந்­து­வி­டக்­கூ­டாது என்­றார்.

நாட்டில் இன நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­வ­தற்­காக நாங்கள் பல வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வருகின்றோம். az  நாட்டில் இன நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­வ­தற்­காக நாங்கள் பல வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வருகின்றோம். az Reviewed by Madawala News on 7/16/2016 01:21:00 PM Rating: 5