Accaddemy

இஸ்­லா­மிய பாரம்­ப­ரிய ஆடை அணிந்­தி­ருப்­பதே பராக் ஒபா­மா இஸ்லாத்தை நேசிப்பவர் என்பதை உறுதி செய்து விடுகிறது. பில் ஓரெ­யில்­லியால். b



அமெ­ரிக்க ஜனா­தி­பதி இஸ்­லா­மிய பாரம்­ப­ரிய ஆடை அணிந்­தி­ருப்­பதை வெளிப்­ப­டுத்தும் இது­வரை அறி­யப்­ப­டாத புகைப்­ப­டங்கள் அந்­நாட்டு முன்­னணி ஊட­க­வி­ய­லா­ளரும் வர­லாற்று அறி­ஞ­ரு­மான பில் ஓரெ­யில்­லியால் முதல் தட­வை­யாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அந்தப் புகைப்­ப­டங்கள் 1990 களில் அமெ­ரிக்க மேரி­லாண்ட்டில் அவ­ரது சகோ­தரர் முறை­யா­ன­வரின் இஸ்­லா­மிய முறைப்­படி இடம்­பெற்ற திரு­ம­ணத்தின் போது எடுக்­கப்­பட்­ட­தாக பில் ஓரெ­யில்லி கூறு­கிறார்.

இந்தப் புகைப்­ப­டங்கள் பராக் ஒபா­மா­வுக்கும் இஸ்­லாத்­துக்கும் இடை­யி­லான உணர்­பூர்­வ­மான பிணைப்பை வெளிப்­ப­டுத்­து­வ ­தாக உள்­ள­ன என அவர் தெரி­வித் தார்.

ஜனா­தி­பதி பராக் ஒபாமா அமெ­ரிக்கா தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து எதிர்­கொண்ட அச்­சு­றுத்­தல்­களை அடை­யாளம் காணத் தொடர்ச்­சி­யாகத் தவறி ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் மத்­திய கிழக்கில் வெறி­யாட்டம் ஆட அனு­ம­தித்­துள்ளார். ஆனால் அவர் தனது தவறை ஒப்­புக்­கொள்ளப் போவ­தில்லை" என பில் ஓரெ­யில்லி கூறினார்.
“ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உல­க­மெங்கும் முஸ்­லிம்கள் உள்­ள­டங்­க­லான பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோரை படு­கொலை செய்­வ­தற்கு அனு­ம­தித்­தமை ஒபா­மாவின் அர­சாங்­கத்தின் மாபெரும் தவறு என்­பதில் கேள்­விக்கு இட­மில்லை" எனக் கூறிய அவர், “பராக் ஒபாமா தனது தவறை ஒரு­போதும் ஒப்­புக்­கொள்­ளவோ அல்­லது ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அச்­சு­றுத்­தலை சரி­யாகக் குறிப்­பி­டவோ இல்லை" எனத் தெரி­வித்தார்.
அத்­துடன் பராக் ஒபாமா 'இஸ்­லா­மிய தீவிரவா தம்' என்ற சொற்­ப­தத்தைப் பயன்­ப­டுத்த மறுத்து எப்போதும் போரா­ளிகள் அல்­லது தீவி­ரவாதிகள் என்று மட்­டுமே கூறி வருகிறார். அந்த வகையில் எமது எதிரிகள் யாவர் என்பதில் அவர் குழப்பமடைந் திருப்பது முழு அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற் படுத்தக் கூடியதாகும் என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்­லா­மிய பாரம்­ப­ரிய ஆடை அணிந்­தி­ருப்­பதே பராக் ஒபா­மா இஸ்லாத்தை நேசிப்பவர் என்பதை உறுதி செய்து விடுகிறது. பில் ஓரெ­யில்­லியால். b இஸ்­லா­மிய பாரம்­ப­ரிய ஆடை அணிந்­தி­ருப்­பதே பராக் ஒபா­மா இஸ்லாத்தை நேசிப்பவர் என்பதை உறுதி செய்து விடுகிறது.  பில் ஓரெ­யில்­லியால். b Reviewed by Madawala News on 7/08/2016 11:06:00 AM Rating: 5