Accaddemy

கட்­டு­நா­யக்க விமான நிலையம் மூடப்­படவுள்ள கால நேர விபரம் இதோ. Bia



கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்த வேலை­க­ளுக்­கா­கவும் சுற்றுலா பய­ணி­களின் வரு­கை­யினை மேலும் அதி­க­ரிக்கும் முக­மா­கவும் விமான நிலையம் எதி­ர்வரும் மூன்று மாதங்­க­ளுக்கு பகல் நேரத்தில் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டி­ருக்கும் என கட்­டு­நா­யக்க விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதி­கார சபையின் பணிப்பாளர் நாயகம் எம். எம். நிமல்சிறி  தெரி­வித்தார்.

இதன்­படி அடுத்த வருடம் ஜன­வரி மாதம் 06 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை­யான 03 மாத காலப்­ப­கு­தியில் காலை 08. 30 மணி முதல் மாலை 4.30 மணி வரைக்­கு­மான காலப்­ப­கு­தி­யி­லேயே குறித்த விமான நிலையம் மூடப்­பட உள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்­பி­டு­கையில் கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் கடந்த 1986 ஆம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு 30 வரு­டங்­க­ளா­கி­யுள்ள நிலை­யிலும் இது­வ­ரைக்­கு­மான காலப்­ப­கு­தியில் எந்த வித­மான மீள் புன­ர­மைப்பு மற்றும் திருத்த வேலை­களை விமான நிலை­யத்தில் நாம் மேற்­கொள்ள வில்லை.

இதனால் தற்­போ­தைய நிலையில் சுற்றுலாப் பய­ணி­களின் வரு­கையும் சடு­தி­யாக குறை­வ­டைந்து வரு­கின்­ற­மையை நாம் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

அது­மட்­டு­மல்­லாமல் சுற்றுலாப் பய­ணி­களின் வரு­கை­யா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் முக்­கிய பங்கு வகிக்­கின்­றது. இத­னா­லேயே விமான நிலைய பணிகள் 03 மாதங்­க­ளுக்கு பகுதி நேர­மாக இடை நிறுத்­தப்­பட்டு விமான நிலையம் மூடப்­பட உள்­ளது.

காலை­வே­ளையில் திருத்­தப்­ப­ணிகள் அனைத்தும் மேற்­கொள்­ளப்­பட்டு மாலையில் அதா­வது 4.30 மணிக்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மீண்டும் விமான நிலைய பணிகள் வழ­மைக்கு திரும்பும்.

அது­போல பய­ணி­களின் நலன் கருதி அவசர பிரயாணங்களுக்கு மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன என்றார்.
கட்­டு­நா­யக்க விமான நிலையம் மூடப்­படவுள்ள கால நேர விபரம் இதோ. Bia கட்­டு­நா­யக்க விமான நிலையம் மூடப்­படவுள்ள கால நேர விபரம் இதோ. Bia Reviewed by Madawala News on 7/23/2016 09:10:00 AM Rating: 5