Yahya

இலுப்பையில் ஏறிய முடப்பேய்களை கண்டு வெருளும் தவம்.

முகமது பர்ஸான்

கிழக்கின் எழுச்சி என்ற பெயர் முஸ்லிம் காங்கிரஸ் வட்டத்தின் சிம்ம சொப்பனமாகிப் போவதற்கு வெறும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே எடுத்துக் கொண்டது.

இதற்கு காரணம் அதன் செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல. மாற்றம் ஒன்றின் தேவையை நாடி நிற்கும் பாமர மக்களின் நாடித் துடிப்பை அறிந்து காலத்தேவையாக சரியான நேரத்தில் முன்வைக்கப்பட்டதும் ஒரு காரணமாகும்.

மு.காவை எதிர்த்துக் கொண்டு வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிப்பது ஹகீம் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. தொல்லை விட்டது என்று அவர் நிம்மதியடைந்ததையும், தன்னை கேள்விக்குட்படுத்தக் கூடிய மூத்த தலைவர்கள் வெளியேறுவதை வரவேற்குமாற் போன்ற செயல்பாடுகளையும்தான் மக்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வெளியேற்றங்கள் குறித்து அவர் அவ்வளவு அலட்டிக் கொண்டதில்லை.

கிழக்கின் எழுச்சி பற்றிக் கேட்டால், அது எமக்கு ஒரு பொருட்டே அல்ல எனும் தோரணையில் பதில் சொல்கிறார்கள்.

ஆனால் கிழக்கின் எழுச்சி ஆரம்பிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்ததும் காலில் சுடுநீரைக் கொட்டிக் கொண்டது போல் பதறுவது வெளிப்படையாக தெரிகிறது.

மாகாண அமைச்சர் நசீர் சொல்கிறார், கிழக்கின் எழுச்சி டயஸ் போறாவாம். ஆரிப் சம்சுதீன் சொல்கிறார் முஸ்லிம்களின் அரசியல் இருப்புக்கெதிரான சதியாம்.

முஸ்லிம் வெளிச்சம் சொல்கிறது ரிஷாத் மற்றும் அதாவுல்லாஹ் இதன் பின் இருக்கிறார்களாம். மேலும் அரசியல் முகவரி இழந்தோரின் முயற்சியாம். 

அரசியல் முகவரி இழந்தவர்களின் முற்சிக்கு மு.காவின் தலை முதல் கால் வரை அனைவரும் இத்தனை எதிர்ப்புகளை மிகவும் முனைப்பாக காட்டுவது ஏன்?

மா. ச உறுப்பினர் தவம் அவர்களோ ஒரு படி மேலே போய் கிழக்கின் எழுச்சியின் தலைவரையும் , தளபதியையும் தனிப்பட்ட முறையில் தாக்கியதையும் முழு முஸ்லிம் சமுகமும், புத்தி ஜீவிகளும் அவதானித்துக் கொண்டுதானிருந்தார்கள். இவர் தென்கிழக்கு பல்கலைக்கு அவமானம் தேடித்தந்துவிட்டார் என்று சொன்ன அவரது பல்கலை சகபாடிகள், கருத்தை கருத்தால் வெல்ல முயலாமல் தனிப்பட்ட முறையில் சேறு பூச முயல்வது தவத்தின் தோல்வி பயத்தையே பறை சாற்றுகிறது என்றார்கள். 

மற்றவர்களை விடவும் தவம் அவர்கள் கிளம்பியடித்துக் கொண்டு எதிர்ப்பதற்கு இன்னுமொரு காரணம், உள்ளூரிலுள்ள ஒரு முக்கிய புள்ளி கிழக்கின் எழுச்சியின் முக்கிய பொறுப்பிலிருப்பது, தவம் அவர்களின் எதிர்கால அரசியலை கேள்விக்குட்படுத்தும் என்பதனாலேயே என்று சாமானிய மக்களும் புரிந்து வைத்திருப்பதால், விடயம் சுவாரசியமாகின்றது.

முஸ்லிம் தேசப் பிரகடனம் செய்த தவம் எங்கே போனான், எனது இடது கண் போல் மருதமுனையை பார்ப்பேன் என்ற தவம் எங்கே போனான். என்று கவலை கொள்ளும் பல்கலை வட்ட இளைஞர்கள், சுயநல அரசியலுக்குள் விழுங்கப்பட்ட தவத்திற்காக இரங்கற்பா படிக்கிறார்கள்.

கிழக்கின் எழுச்சி பற்றி தலைவர் கொண்டுள்ள  பயத்தை அவரது தொடர்ச்சியான வழமைக்கு மாற்றமான கிழக்கு விஜயங்கள் வெளிப்படுத்தினாலும், கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் தாற்பரியத்தை உணர்ந்ததாக தெரியவில்லை.

அல்லது ஆப்பு தலைவருக்குத்தானே நமது பதவிகளுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று வாளாவிருக்கிறார்களா தெரியவில்லை.

எது எப்படியாயினும், அடுத்தடுத்து வரும் வாரங்களில் கிழக்கின் எழுச்சி குழு செய்யப்போகும் நடவடிக்கைகளை மக்களும், பத்திரிகையாளர்களும், ஆதரவாளர்களும் எதிர்ப்பார்ப்பதை விடவும் முஸ்லிம் காங்கிரஸார் ஒரு கிலியுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள்.


இலுப்பையில் ஏறிய முடப்பேய்களை கண்டு வெருளும் தவம். இலுப்பையில் ஏறிய முடப்பேய்களை கண்டு வெருளும் தவம். Reviewed by Madawala News on 7/17/2016 12:37:00 AM Rating: 5