Accaddemy

என் மகளைக் கொன்ற மகனை மகனை சுட்டுக்கொல்வேன்: தந்தை .



கவுரவக் கொலை செய்யபட்ட பெண்  பாகிஸ்தானின்  குவாண்டீல் பலோச் (வயது 26).

சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அந்த புகழை வைத்து, மாடலிங்கும் செய்து வந்தார். இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதே சமயத்தில், அவர் கலாசாரத்தை இழிவுபடுத்துவதாக பழமைவாதிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஜூலை 14ம் தேதி, பலூச் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார், இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசீம், பலூச்சை கெளரவ கொலை செய்தது தெரியவந்தது.

குடும்ப கவுரவத்தை குழிதோண்டி புதைத்ததால், விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து பலோச்சை கொன்று விட்டதாக அவருடைய சகோதரர் முகமது வசீமும் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்லவேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் கடைக்குட்டி பெண்ணை கொன்றுவிட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
என் மகளைக் கொன்ற மகனை மகனை சுட்டுக்கொல்வேன்: தந்தை . என் மகளைக் கொன்ற மகனை  மகனை சுட்டுக்கொல்வேன்: தந்தை . Reviewed by Madawala News on 7/23/2016 11:43:00 AM Rating: 5