Kidny

Kidny

தொடர் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது !


மாத்தளை மாவட்டத்தில் லக்கல பிரதேசத்தில் அமையவுள்ள மொரகஹாகந்த நீர்பாசண திட்டம் நாளை ஜனாதிபதியினால்  துவங்கிவைக்கப்படவுள்ள நிலையில் அங்கு கடந்த 20 திகதி முதல் பிரதேசவாசிகளினால் உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த எட்டு வருடங்களாக முன்னெடுக்கப்படும் குறித்த நீர்பாசன திட்டத்தினால் மாத்தளை ,மஹியங்கணை, பொலன்னறுவை உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகளும் பயனடைய உள்ள நிலையில்  இந்த திட்டத்தால் தங்கள் காணி மற்றும் வீடுகளை இழக்கும் மக்களுக்காக பிரத்யேக காணிகளில் வீடமைத்து கொடுக்க அரசு வாக்குறுதி அளித்த போதும் தங்கள் காணிகளின் பெறுமதியில் 50% அரசு வழங்க வேண்டும் என அங்குள்ள மக்கள் கடந்த 20 ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.



இன்றைய தினம் லக்கல பிரதேசத்துக்கு விஜயம் செய்த பிரதமரின் விஷேட பிரதிநிதி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹாசு மாரசிங்க மத்திய மாகாண சபை உறுப்பினர்  ஹிதாயத் சத்தார் லக்கல தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன அவர்களின் முயற்சியால் 
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி தலையீட்டினால் அக்கிராம மக்களுக்கு 50 % நஷ்டஈடு வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது.

தொடர் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது ! தொடர் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது ! Reviewed by Madawala News on 7/24/2016 06:30:00 PM Rating: 5