Kidny

Kidny

முதலீடு இன்றி நாளைந்து தலை முறைக்கு சொத்து சேர்க்கும் வியாபாரமா அரசியல்


இன்றைய உலகத்தின் சூழ்நிலையில் குறித்த சில மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர, மற்றைய அநேக நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறையான குடியாட்சியே  நிலவி வருகின்றது குடியாட்சி என்றால் மக்களாகிய நாம் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு நாட்டின் ஆட்சியாளரையே ஒரு மாநிலத்தின் ஆட்சியாளரையோ  தேர்ந்தெடுக்கும் விதமாகும்

மனிதனுடைய தனது அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் மார்க்கம் கல்வி, சமூகம் போன்ற இன்னொரன்ன செயற்பாடுகளில் இந்த அரசியலும் கலந்துள்ளது என்பதை யாராலும் மறுதலிக்க முடியாது

ஏனெனில், இன்று இந்த குடியாட்சியினை எந்த மக்கள் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்தியாக வலுப்பெற்று இருக்கின்றார்களோ அதே போன்று தான் மக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்து விதமான பொருட்களின் விலை வாசிகளையும் தீர்மானிக்கும் உந்து சக்தியாக இந்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் உருவெடுத்திருக்கின்றார்கள் என்றால் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உண்மையில் நாமெல்லாம்  குடியாட்சி  என்றால் என்னவென்பதை அறியாததன் விளைவு தான் இவர்கள் பாமரரர்களாகிய எம்மை ஏமாற்றுவதற்கு முக்கிய காரணம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.....

ஆனால், அது தான்  நிதர்சனமான உண்மையுமாகும். குறிப்பாக எமது அன்டை நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டு பார்ப்போமேயானால் குடியாட்சி ஆட்சி என்றால் என்ன  சகோதரர்களே  வேற்பாளர்களை நாம் தானே தேர்வு செய்து ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வேண்டும் 

ஆனால், அதற்கு மாறாக கட்சிகள் தான் வேற்பாளர்களைத் அங்கு தேர்வு செய்து மக்கள் முன் திணிக்கின்றது அங்கு கட்சிகள் தேர்வு செய்யும் வேற்பாளர்கள்  ஆள் பலம் பணபலம் உள்ளவர்களா? என்பதே பார்க்கப்படுகின்றதே தவிர, அவன் சமூக சிந்தனையுடையவனா? கல்வி அறிவுள்ளவனா ? என்பதெல்லாம் உள்வாங்கப்படுவதே இல்லை  பிறகு  எங்கிருந்து இதனை குடியாட்சி  என்று கூற முடியும் ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னராவது பாராளுமன்றத்தில் இவர்கள்  மக்களின் கருத்தை முன் வைப்பாரா என்றால் அங்கும் அது சாத்தியப்படுவதற்கு வாய்ப்பில்லை ஏனெனில் பாராளுமன்றத்தில் அநேக அரசியல் வாதிகள் கட்சியின் கருத்தையே எடுத்து வைக்கின்றார்கள் பின்பு இது தானா குடியாட்சியின் நெறிமுறை....?

இப்போதெல்லாம் அரசியலில் நல்லவர்களுக்கு வேளையே இல்லை என்பார்கள். நொன்டிக் குதிரையை யாராவது ஓட்டப் பந்தயத்தில் ஓட்ட வைக்க முடியுமா என்றெல்லாம் கேள்விக் கனைகளை பொது மக்களாகிய நாம் எழுப்புகின்ற கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

இவ்வாறான சூழ்நிலையில், சமூக சிந்தனையுடைய அநேகர்  கூட அரசியலில் தடம் பதிப்பதற்கு தயங்குகிறார்கள். ஏன் அரசியலுக்கு இந்த நிலைமை என்றால், அதற்கு முற்று முழுதான காரணம்  அரசியல்வாதிகளின் சுக போக வாழ்க்கையும் அவர்கள் மக்கள் நல சேவைகளில் வைத்திருக்கின்ற கவனயீனமுமே என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்

உலகத்தின் சனத்தொகை அடிப்படையில்  இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்திய தேசத்தில் ஒரு நேர உணவுக்கு உத்தரவாதமில்லாத மக்கள் முப்பது கோடி மக்கள் வாழ்கின்றார்களாம். கிடைக்கின்ற வருமானம் வாய்க்கும் வயிற்றுக்கும் பத்தாமல் நடுத்தரமாய் வாழ்க்கையை கழித்து கொண்டிருக்க கூடிய மக்கள் ஐம்பது கோடி மக்கள்  வாழ்ந்து வருகின்றார்களாம் ஆனால் இந்திய நாடு அந்திய நாட்டிடம் இருந்து பெற்ற கடனிற்காக    தினந்தோரும் அந்திய செலவணியாக வட்டியாக மாத்திரம்  ஐநூறு கோடி ரூபாய் செலுத்தி வருகின்றதாம் இதுதான் இந்தியாவின் அரசியல்யாப்பு முறைகள் என்றால், ஆச்சரியப்பட்டு போய் விடுவோம். ஆனால், அதுதான் நிதர்சனமான உண்மையாகும் இது கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் பிரபல ஊடகங்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த இரு மாநிலங்களுக்கான தேர்தலில் இரு மாநிலங்களிலும் தேர்தலுக்காக செலவலித்த பணத்தொகை 800 கோடி ரூபாய் ஆகும். இவ்வாறு விளம்பரத்துக்காவும் ஆடம்பரத்துக்காகவும் இவர்கள் செலவு செய்யும் பணம் எல்லாம் பொது மக்களாகிய எம் மூலமான வரியில்தான் அறவிடப்படுகின்றதென்பது எத்தனை பேருக்கு தெறியும் ஆனால் அதுதான் மறைமுகமான உண்மை 

இவ்வாறான அரசியலை  குடியாற்சி என்று எவ்வாறு செல்ல முடியும்....? தற்போது எமது நாட்டின் அரசியலும் இதுக்கு ஒத்ததாகவே  காணப்பட்டாலும், இங்கு ஜனாதிபதி ஆட்சி முறையும்  மாகாண ஆட்சி முறையுமே நடைமுறையிலில்லை என்பதே சுட்டிக் காட்ட பட வேண்டியது

எமது நாட்டின் அநேக அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால், தேர்தல் காலங்களில்  அவர்கள் மக்கள் மீது காட்டும் அக்கறையை தேர்தலுக்கப்பால் காட்டுவதில்லை சுக போக வாழ்க்கையை காணுமிடத்து தமக்கு வாக்களித்த மக்களையும் அவர்களுக்கு தாம் கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்து ஏதோ தானோ என்ற நிலைப்பாட்டில் தான் அவர்கள்  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை கண்கூடாகவே  நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம்

ஆனால் மக்களின் உரிமைகளின் மீதும் அவர்களின்  தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பொடும்போக்காக செயற்படுகின்ற இந்த அரசியல் வாதிகள் தனது குடும்பங்களின் தேவையையோ தனது சுகபோக வாழ்க்கையையோ துறந்து வாழ்கின்றார்களா என்றால் இல்லை....?

அவர்கள் அவர்களுடைய போக்கில் சுக போக வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருக்கின்றார்கள் தனக்கு வாக்களித்தோ மக்களோ மெம்மேும் அதிபாதாலத்துக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அநேக அரசியல்வாதிகளின் பிள்ளைகளைப் பாருங்கள் மேற்கத்தய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் புலமைப்பரிசில் என்ற பெயரில் தனது அதிகார பலத்தையும் பொருளாதார பலத்தையும் உபயோகித்து உயர்தர படிப்புக்களுக்காக அனுப்பி விடுகிறார்கள் அதன் பிற்பாடு அரசியலில் ஓய்வு பெறுமிடத்து தானும்  குடும்பத்தோடு சென்று அங்கு குடிபெயர்ந்து விடுகின்றார்கள்

ஆனால், தமக்கு வாக்களித்த ஏழை மக்களோ நேரான வழியில் படித்து திறமைகளைக் காட்டினாலும் கூட, உள் நாட்டிலுள்ள  உயர் தர பாடசாலைகளில் கற்பதற்கே முதலீடு  தேவைப்படுகின்றது. என்றால், இதுவா அரசியல்வாதிகள் தனக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும்  தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும்...?

முதலீடின்றி நாளைந்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஒரு புத்தகம் வெளியீட்டால்  நிச்சயம் அதற்கு
பதிப்புரிமையும் முன்னுறையும் அரசியல் வாதிகளையே சாரும் என்பதில் எவ்வீத ஐயமுமில்லை

அரசியலுக்கு வருவதற்கு முன்னரான அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகளை ஆராய்ந்தால்     நிச்சயம் அங்கு தான் அரசியல்வாதிகளின் பல தில்லு முல்லுகளையும் அவர்களின் நம்பிக்கை நாணயத்ததையும் கண்டு கொள்ள முடியும்

ஆனால், முஸ்லிம்களாகிய நாம் உயிருக்கும் மேலாக நேசிக்க கூடிய  எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இவர்களின் அரசியலுக்கு முற்றுக்கும் மாற்றமான ஒரு அரசியல் செய்து  முழு உலகுக்கும் முன்னுதராணமாக கற்றுத் தந்துள்ளார்கள் அவர்களை பின்பற்றிய சஹாபாக்களின் வாழ்க்கையிலிருந்து நிறையவே அரசியலுக்கு  முன்மாதிரிகள் உண்டு அதுவெல்லாம் எங்கு எம் அரசியல்வாதிகள் பின்பற்றுகிறார்கள்.

அற்ப சொற்ப அரசியல் அதிகாரங்களுக்காக தனது ஈமானையே இழக்கக் கூடிய அரசியல்வாதிகளைத்தான் நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். அந்திய அரசியல்வாதிகள்  முஹம்மத் நபியின் அரசியலை வாயினால் பிரகடனப்படுத்துவதை கூட எமது அரசியல்வாதிகள் பிரகடனப்படுத்துவதில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்

ஆட்சி செய்பவர்கள் அயோக்கியர்கள் என்றால் தேர்ந்தெடுத்தவர்கள் முட்டாள்கள் என்ற வாசகத்துக்கு நாம் மெம் மேலும் ஆளாகி விடாமல் எதிர் காலத்தினிலாவது பெரும்பான்மையினர் ஆட்சி செய்கின்ற எம் நாடுகளில் முற்று முழுதாக இஸ்லாமிய ஆட்சி முறையை நிறுவுவது சாத்தியமில்லா விட்டாலும் எமது மார்க்கத்தையும் உரிமைகளையும் தேவைகளையும் எந்த வீத தடையுமின்றி செய்வதற்கு களைப்பாறாமல் உழைக்கின்ற உன்னத தலைமையை தேர்ந்தெடுத்து எமது நாட்டையும் சமூகத்தையும் நல் வழியில் இட்டுச் செல்ல முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ் 

வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை

முதலீடு இன்றி நாளைந்து தலை முறைக்கு சொத்து சேர்க்கும் வியாபாரமா அரசியல் முதலீடு இன்றி நாளைந்து தலை முறைக்கு சொத்து சேர்க்கும் வியாபாரமா அரசியல் Reviewed by Madawala News on 7/17/2016 12:57:00 PM Rating: 5