Free Space

கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையில் பெரும்திரளான முஸ்லீம்கள் கலந்துகொள்வார்கள் ...


கூட்டு எதிர்க்­கட்­சி­யினர்  அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஏற்­பாடு செய்­துள்ள பாத யாத்­திரை எதிர்­வரும் 28 ஆம் கண்டியில் இருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் இதில் பாரிய அளவில் முஸ்லிம்கள் கலந்துகொள்வார்கள் என நாகல் மாந­கர சபையின் முன்னாள் உறுப்­பி­னரும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்  குரு­நாகல் அமைப்­பா­ள­ரு­மான அப்துல் சாத்தார் குறிப்பிட்டார்.

இந்த பாதயாத்­தி­ரையில்  பெரு­ம­ளவில்  முஸ்­லிம்­களைப் பங்குகொள்ளச் செய்­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்­வ­தற்கு  பொறுப்­பா­ள­ராக  குரு­நாகல் மாந­கர சபையின் முன்னாள் உறுப்­பி­னரும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்  குரு­நாகல் அமைப்­பா­ள­ரு­மான அப்துல் சாத்தார் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

இது தொடர்பில் மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட அவர் நாட்டில் முஸ்லீம்களுக்கு நல்லாட்சியில் கிடைத்தது ஒன்றுமில்லை.

ஆட்சியை காப்பாற்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் அரசு முஸ்லீம்கள் தொடர்பில் கவனம் எடுக்கவில்லை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்காக  முஸ்லிம் மக்கள் பெருமளவு ஆதரவு வழங்கி வருவதாக  சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட  அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.
கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையில் பெரும்திரளான முஸ்லீம்கள் கலந்துகொள்வார்கள் ... கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையில் பெரும்திரளான முஸ்லீம்கள் கலந்துகொள்வார்கள் ... Reviewed by Madawala News on 7/26/2016 04:30:00 PM Rating: 5