Accaddemy

யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதலை காண்பித்து இனவாதத்தை தூண்டாதீர்!


ஊடக அறிக்கை:

யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதலை காண்பித்து இனவாதத்தை தூண்டாதீர்!

-இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்-

 

புதிய மாணவர்களை வரவேற்பதற்கான நடன நிகழ்வொன்று சம்பந்தமாகயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் இருகுழுவுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்மோதலாக முற்றியதையிட்டு நாம் வருந்துகிறோம். படித்தவர்கள் என்று வழங்கப்படுகின்ற பல்கலைக்கழக மாணவர்கள் இருகுழுக்களாகப் பிரிந்து மோதிக் கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இது நடக்கக்கூடாத ஒன்றாகும்.

 

சிங்கள் மற்றும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வந்த பெருமளவு பிரச்சனைகளுக்கே இன்னும் தீர்வுகள் இல்லாத நிலையில்நிகழ்வொன்றின் நடன நிகழ்வொன்று காரணமாக உருவாகிய சண்டையை குறித்துக்காட்டிஇனவாதத்தை விதைக்கும் நிகழ்ச்சி நிரலில் சிலர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

 

இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதலொன்று ஏற்பட்டபோதும்அதற்கு வழங்கப்பட்ட பிரசாரமும்யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்துக்கு வழங்கப்படும் பிரசாரமும் முற்றாக வேறுபட்டதாகவே இருக்கின்றது.

 

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலின் பொறுப்பைசில தமிழ் ஊடகங்கள் சிங்கள மாணவர்களின் மேல் சுமத்துகின்றன. மறுபுறம் சிங்கள ஊடகங்கள் சில இந்த மோதலின் பொறுப்பை தமிழ் மாணவர்களின் மேல் சுமத்துகின்றன.

சம்பவத்தை அறிக்கையிடுவதற்கு அப்பால் சென்றுதத்தமதுகருத்துக்களை வெளியிடுவதற்கும் சில சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்கள் முயற்சித்திருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து சில அரச ஊடகங்கள் மௌனம் சாதித்துள்ளன. சமூக ஊடக இணையங்களில் யாழ்ப்பாண சம்பவம் எரிந்து கொண்டிருக்கும்போதுஉண்மையான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அரச ஊடகங்களை அவதானித்துக் கொண்டிருந்த நபர்களுக்கு உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அரச ஊடகங்கள் இல்லாமலாக்கியிருக்கின்றன. அரசை விமர்சிப்பது குறித்து செய்தி அறிவித்தல்கள் வெளியிடும் தகவல் திணைக்களம்இந்த சம்பவம் குறித்து எதுவித தெளிவுபடுத்தல்களையும் வழங்கவில்லை. அரச தரப்பிலிருந்து உண்மை நிலை தெளிவுபடுத்தப்படவில்லை.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் ஏற்பட்ட மோதல் எந்த தரப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும்அதற்கான தீர்வுகளைத் தேடுவதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்கு பதில் வழங்குவதற்கான முறைமை இனவாதம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

 

யுத்ததில் மறைந்து கொண்டுஅரச பலத்தை பயன்படுத்தி சிங்கள ஊடகவியலாளர்களைப் போன்றேதமிழ் ஊடகவியலாளர்களையும்சமூக செயற்பாட்டாளர்களையும்பல்கலைக்கழக மாணவர்களையும் கொலை செய்த காலம் பலருக்கும் மறந்து போயுள்ளதாகத் தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் உதயன் தீ வைக்கப்படும்போது மௌமாக பார்த்துக் கொண்டிருந்த தமிழ் தரப்பும்கொழும்பு லங்கா ஈ நிவ்ஸ்சிர போன்ற ஊடக நிறுவனங்கள் தீ வைக்கப்படும்போது மௌமான பார்த்துக் கொண்டிருந்த சிங்கள தரப்பும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்தை மையப்படுத்தி இனவாதத்தை விதைப்பதை தோற்கடிக்கச் செயற்வதற்கு ஒன்றிணையுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களையும்ஏனைய அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் கோருகிறோம். குறுகிய இலக்குகளுள்ள சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாகி விடாதுபுத்திசாதுர்யமாக செயற்படுமாறு பல்கலைக்கழக மாணவர்களிடம் வேண்டிக் கொள்கிறோம்.

 

அரசு முன்னெடுக்கின்ற நல்லிணக்க செயற்பாடுகளின் வெற்றி குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு இது சிறந்ததொரு உதாரணமாகும். ஊடகவியலாளர்களை ரயிலில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்வதால் மாத்திரம்நல்லிணக்கம் உருவாகாது என்பதை அரசு இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

 

தரிந்து ஜயவர்தன (செயலாளர்)
தரிந்து உடுவரகெதர (தலைவர்)
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்.
0771331621

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதலை காண்பித்து இனவாதத்தை தூண்டாதீர்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதலை காண்பித்து இனவாதத்தை தூண்டாதீர்! Reviewed by Madawala News on 7/19/2016 01:14:00 AM Rating: 5